IT ரெய்டால் வாரிசு படத்தின் வசூல் அம்பலம்.. அப்போ ₹300 கோடி சொன்னது வடையா?

Author: Udayachandran RadhaKrishnan
22 January 2025, 4:48 pm

தெலுங்கு திரையுலகில் பரபரப்பை கிளப்பி வரும் செய்தி வருமான வரித்துறை சோதனைதான். இதில் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு, புஷ்பா பட தயாரிப்பாளர் வீட்டில் அதிரடி ரெய்டு நடந்து வருவது பேசு பொருளாகியுள்ளது.

இதையும் படியுங்க: இது மட்டும் இல்லைனா விஜய் கட்சியே ஆரம்பித்திருக்க முடியாது : புயலை கிளப்பிய இயக்குநர்!

குறிப்பாக விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரித்தவர் தான் தில் ராஜூ. இவர் தற்போது கேம் சேஞ்சர் படத்தை தயாரித்துள்ளார். இதனிடையே தயாரிப்பாளர் தில் ராஜு, அவரின் சகோதரர் ஷிரிஷ், மகள் ஹன்சிதா ரெட்டி மற்றும் உறவினர்கள் என 8 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை 2வது நாளாக நடைபெற்று வருகிறது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் உள்ள தில் ராஜுவின் வீடு, ஜூப்ளி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் அவரின் உறவினர்கள் வீடு என 8 இடத்தில் சோதனை நடக்கிறது.

படத்தில் ய்த முதலீடு, கிடைத்த வருமானம் எவ்வளவு என அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதில் வாரிசு திரப்படம் 120 கோடி மட்டுமே வசூல் செய்ததாகவும், விஜய்க்கு 80 கோடி ரூபாய் கொடுத்தாகவும், இந்தப் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் கண்காட்சியாளர்களுக்கு இழப்பீடாக 60 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Vijay Vaarisu Movie Collection Rs 120 Cr Fake

ஆனால் வாரிசு படம் ஹிட் அடித்தது என்றும், 300 கோடி வசூல் செய்தது என அப்படம் வெளியான 15 நாட்களில் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!
  • Leave a Reply