2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு, அஜித்குமாரின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.
இரு படங்களுமே ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளதால், எந்த படம் வெற்றி பெரும் என்பதைத் தாண்டி, எந்த படத்தை எந்த படம் வீழ்த்தும் என்றே இரு நடிகர்களின் ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த டிசம்பர் 31ஆம் தேதி துணிவு படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியான துணிவு ட்ரெய்லர், கலவையான விமர்சனங்களைப் பெற்று, யூடியூபில் அதிகமான பார்வைகளைக் குவித்து வந்தது.
மேலும் யூடியூப் ட்ரெண்டிங்கிலும் முதலிடத்தில் இருந்தது. பின்னர், விஜய்யின் வாரிசு பட ட்ரெய்லர் வெளியானது. குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக, செண்டிமெண்ட், ஆக்ஷன், காதல் என கலவையான காட்சிகளுடன் வெளியான இந்த ட்ரெய்லரும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனிடையே, வெளியான 24 மணி நேரத்தில் அதிகமான பார்வைகளைப் பெறும் போட்டியில், துணிவு பட ட்ரெய்லர் வெற்றி பெற்றுள்ளது.
வெளியான 24 மணி நேரத்தில் வாரிசு படத்தின் ட்ரெய்லர் 2.3 கோடி பார்வைகளைக் கடந்திருக்கும் நிலையில், துணிவு படத்தின் ட்ரெய்லர் 2.5 கோடி பார்வைகளைக் கடந்திருந்தது.
வாரிசு பட தமிழ் மற்றும் தெலுங்கு டிரெய்லர் ஒட்டு மொத்தமாக 3.2 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளதும், யூடியூப் ட்ரெண்டிங்கில் துணிவு படத்தை பின்னுக்குத் தள்ளி வாரிசு பட ட்ரெய்லர் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளதும், வெளியான ஒரு மணி நேரத்தில் அதிகமான பார்வைகளைப் பெறும் போட்டியில் வாரிசு படமே வெற்றி பெற்றிருந்தது.
இதனிடையே, படத்தின் ட்ரைலர் மிகவும் செண்டிமெண்ட்டாக் இருந்தாலும் கண்டிப்பாக படம் செம்ம மாஸான பேமிலி படமாக இருக்கும் என்றே எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் வாரிசு படத்தின் ட்ரைலர் லைக்ஸ் எல்லாம் Bot மூலம் பெறப்பட்டது, அதனால் தான் இவ்வளவு லைக்ஸ் என்ற தகவல் பரவி வருவதால் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.