இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரம் தொடங்கிய பிக் பாஸ் 7 ல் தற்போது, சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். முதல் வாரமே எதிர்பார்க்காத நிறைய விஷயங்கள் நடைபெற்றது. அந்த வகையில் பிரதீப் அம்மாவை சொந்த அப்பாவே எரித்துக் கொன்றார். இந்த தகவல் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தெரிய வந்தது.
இது தொடர்பாக பேசிய விஜய் வருமா பிரதீப் அப்பா எரிச்சி கொலை பண்ண மாதிரி உங்களையும் எரித்துக்கொள்ள போறார் என்று கூல் சுரேஷ் இடம் பேசி இருப்பார். அங்கே இருந்த சில பேர் இதனை கேட்டு சிரித்து இருப்பார்கள்.
இந்நிலையில், கமலஹாசன் விஜய் வருமா மற்றவர்களின் சோகத்தை கிண்டல் செய்துள்ளார் என்று கண்டித்து இதற்கு விஜய் வருமா உடன் இருந்தவர்களும் சிரித்தார்கள். இது மோசமான விஷயம் என்று விஜய் வருமாவை எச்சரித்து ஸ்டிக்கர் ஒன்றை கொடுத்துள்ளார். மேலும், ஒரு ரியாலிட்டி ஷோவில் இதைச் சொல்லி விஜய் வர்மா கலாய்த்து இருப்பது சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டும் வருகிறது. பல்வேறு தரப்பினரும் அவருக்கு எதிராக கண்டித்து வருகின்றனர்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.