இது வெகேஷன் டைம் யாரும் Disturb பண்ணாதீங்க ப்ளீஸ்…. ஏர்போர்ட்டில் ஜோடியா சிக்கிய தமன்னா!

Author: Shree
26 August 2023, 7:30 pm

2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது.

இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார்.

அதையடுத்து தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் படப்பிடிப்புகள் அனைத்தும் முடித்துவிட்டு இடைவெளி இருக்கும் இந்த சமயத்தில் வெளிநாட்டிற்கு வெகேஷன் சென்றுள்ளார். அதே போல் அவரது காதலர் விஜய் வர்மாவும் வெளிநாட்டிற்கு தனியாக வெகேஷன் சென்றுள்ளார். என்னதான் மீடியாவிடம் இருந்து எஸ்கேப் ஆக தனித்தனியாக கிளம்பி சென்றாலும் அதனை ரசிகர்கள் பார்த்து விஷயத்தை கசியவிட்டு வருகிறார்கள்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 377

    0

    0