Mid Week எவிக்ஷன்.. வெளியேறிய விஜய் வர்மாவின் மொத்த சம்பளம் இத்தனை லட்சமா?
Author: Vignesh11 January 2024, 6:15 pm
இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.
இந்த சீசனில் தான் முதல்முறையாக பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இரண்டாவது வீடு சிறைச்சாலை போன்ற விதிகளுடன் இயங்க தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், பிக் பாஸ் சீசன் 7 ல் கடந்த 80 நாட்களை தாண்டி வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இந்த சீசனில் யார் டைட்டிலை வெல்வார் என்ற கணிப்பு ரசிகர்களால் யூகிக்க முடியவில்லை. காரணம் ஒருவரின் ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்தது போல் இல்லை என்பதுதான். இந்தநிலையில், இந்த வாரம் எலிமினேஷன் யாரென்ற விவரம் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
தற்போது, இவர்கள் ஆறு பேரில் யார் டைட்டிலை ஜெயிப்பார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது. வாக்குகள் அடிப்படையில், தான் வெற்றியாளர் யார் என்பது உறுதியாகும். அர்ச்சனாவுக்கு தான் ஆதரவு அதிகமாக இருந்து வருகிறது. அவருக்கு தான் டைட்டில் கிடைக்கும் என ஒரு கருத்து நிலவுகிறது. இந்த நேரத்தில், ஆறு போட்டியாளர்கள் வீட்டில் இருக்கும் நிலையில், பைனலில் வரும் வெறும் 4 போட்டியாளர் தான் வருவார்களாம். இரண்டு பேரை வாரத்தின் இடையிலே Mid Week எவிக்ஷன் செய்ய இருக்கின்றனர். இன்று விஜய் வருமா பிக் பாஸ் வீட்டை விட்டு Mid Week எவிக்ஷனில் வெளியேறி இருக்கிறார்.
இரண்டாவது முறையாக பிக் பாஸ் வீட்டிற்கு வந்த விஜய் வருமா இந்த முறை 45 நாட்கள் இருந்திருக்கிறார். அவருக்கு ஒருநாள் சம்பளமாக 15 ஆயிரம் ரூபாய் என்று தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் அவர் ஒன்பது லட்சம் ரூபாய்க்கு மேல் அவருக்கு சம்பளமாக தரப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.