ஏஐ தொழில் நுட்பம் இன்று அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இதன் மூலம் நம்மை விட்டு பிரிந்த பலரையும் நம்மால் பார்க்க முடிகிறது.
ரசிகர்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜயகாந்த் அவர்களை 3 திரைப்படங்களில் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நடிக்க வைத்துள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்திலும் அதையடுத்து விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் நடித்து வரும் படைத்தலைவன் என்ற படத்திலும் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்திலும் விஜயகாந்த்தை AI தொழில் நுட்பத்தின் மூலம் தோன்றச் செய்துள்ளனர்.
இதுகுறித்து இயக்குனர் விஜய் மில்டன் கூறும்போது, ‛‛மழை பிடிக்காத மனிதன்” படத்தில் விஜயகாந்த் இருக்கிறார். ஆனால் அவர் எப்படி இருப்பார் எப்படி வருவார் என்பதை இப்போதே சொல்ல முடியாது.
மழை பிடிக்காத மனிதன் ஜூலை மாதமே வெளியாவதால் கோட் படத்துக்கு முன்பே இந்த படத்தில் விஜயகாந்தை அவரது ரசிகர்கள் பார்க்கலாம். விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த போதே அவரை மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்தார் விஜய் மில்டன்.ஆனால் அது முடியாமல் போனதால் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் அவரை தனது திரைப்படத்தில் தோன்றச் செய்துள்ளார்.