பணம் கொடுத்து ரஜினியை அழிக்க பார்க்கும் விஜய்… உண்மையை போட்டு ஒடச்ச பிரபலம்!

Author: Shree
7 August 2023, 6:30 pm

சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 160க்கும் மேற்பட்ட படங்களில் நடிகர் ரஜினி நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் அவரது 169வது படமாக இயக்குனர் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார் இப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

இதனிடையே ரஜினிகாந்திற்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்ற போட்டி விஜய், அஜித் ரசிகர்களிடையே பொரும் அக்கப்போரே நடைப்பெற்று வருகிறது. அப்படி அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று வாரிசு ஆடியோ லான்சில் பல பிரபலங்கள் புகழ்ந்தும் வந்தனர். இதனை விஜய் ரசிகர்களும் கொண்டாடினர். இப்படியொரு நிலையில் என்னை தவிர வேறு யாரும் சூப்பர் ஸ்டார் இல்லை என்பதை ஜெயிலர் படத்தின் மூலம் சொல்லிவிட்டார் ரஜினிகாந்த்.

ஆம், தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் தான், ஆனால் சமீப கலாமாகவே இந்த பட்டத்துக்கு நடிகர் விஜய் போட்டி போட்டு வருவதாகவும், அவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். இந்த சர்ச்சைக்கு இடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜெயிலர் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில், கழுகு காகம் என குட்டி கதை கூறிய ரஜினி விஜய யை தான் காகம் என கூறுகிறார் என கூறப்பட்டு வந்தது. போதிலுக்கு விஜய் ரசிகர்களும் ரஜினியை தாக்கி போஸ்டர் ஒட்டி அலப்பறை செய்தனர்.

ஆனால், திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி ஒருவர் மட்டும் தான் என கூறி வருகிறார்கள். அந்தவகையில் தற்போது, விஜய் பணம் கொடுத்து ஒரு குரூப்பை வளர்த்து அதன் மூலம் தான் ரஜினிக்கு ஈடானவன். அவருக்கு அடுத்து நான் தான் சூப்பர் ஸ்டார் என கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்டு சினிமாவில் ஒரு அரசியல் செய்து சூப்பர் ஸ்டார் பட்டத்தை பறிக்க பார்க்கிறார் விஜய்.

அவரது படம் வெளியாகும்போது மீடியாவில் ஒரு ஆளு, தியேட்டர் ஓனர்களில் ஒரு ஆளு, விநியோகிஸ்தர்கள் மத்தியில் ஒரு ஆளு என தயாரிப்பளர்கள் சங்கத்தில் ஒரு ஆளு என வைத்துக்கொண்டு தன் படம் வசூலிக்கவே இல்லையென்றாலும் பாக்ஸ் ஆபீசில் இவங்களா ஒரு கலெக்ஷ்ன்ஸ் போட்டுக்கொண்டு முன்னேறிவிடுகிறார்கள். அப்படி வளர்ந்து வந்த விஜய் உலக அளவில் பெரும் புகழ்பெற்ற நடிகரான ரஜினியை வெல்ல முடியுமா? அது எப்படி சாத்தியம் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!