சினிமாவில் தான் மாஸ்.. நிஜத்தில் 40 பேரிடம் அடிவாங்கிய விஜய்..! அவரே வெளியிட்ட உண்மை..! (வீடியோ)

Author: Vignesh
7 March 2023, 6:30 pm

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அடுத்தபடியாக அனைத்து தரப்பு மக்களை கவர்ந்தவர்.

விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படம் பெரிய அளவில் வசூலில் வேட்டையாடி வருகிறது. இதனைத் தொடர்ந்து தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு லோகேஷ் இயக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Vijay - Updatenews360

ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் மாஸ்டர் படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதே போல் லோகேஷின் விக்ரம் படமும் எதிர்பார்த்த அளவைவிட பெரிய வெற்றியை கொடுத்தது.

இந்நிலையில், பல வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜய் கொடுத்த பேட்டி ஒன்று தற்போது ரசிகர்களால் வைரலாகி வருகிறது. அதில் நடிகர் விஜய், “நான் காலேஜ் படிக்கும் போது வெளியே சுற்றுலா சென்று இருந்தோம் என்றும், அப்போது ட்ரைனில் இருந்த இரண்டு பேர், தன்னுடன் சேர்ந்து படிக்கும் தோழிகளுடன் கலாட்டா செய்து கொண்டு இருந்தனர்”.

Vijay Twit -Updatenews360

“அந்த நேரத்தில் நாங்கள் 10 பேர் சென்று அந்த இரண்டு பேரையும் அடித்து விட்டோம் எனவும், கொஞ்சம் நேரம் கழித்து அந்த இரண்டு பேர் சென்று 40 பேரை அழைத்து வந்ததால், கடைசியில் அவர்கள் தங்களை அடித்து விட்டனர் எனவும், தன்னுடைய நண்பர்கள் சில பேர் கட்டுப்போட்டு கொண்டு மெட்ராஸ் வந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • கீர்த்தி முதல் நயன்தாரா வரை…தட்டி தூக்கிய ‘நெட்பிளிக்ஸ்’…கொத்தா இறங்கிய அப்டேட்கள்..!