அரசியலுக்காகவே வளர்க்கப்பட்டாரா விஜய்? அப்போ இதெல்லாம் எஸ்ஏசி போட்ட பிளான் தானா?

Author: Shree
19 June 2023, 7:24 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் “தளபதி” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் முன்னணி நடிகராக சிறந்து விளங்கி வருகிறார். 1992ல் நாளைய தீர்ப்பு என்னும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஜய்.

முதல் படத்தில் நிறைய விமர்சனங்களை எதிர் கொண்டாலும் தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் தந்தை இயக்கத்தில் நடித்து, அதன் பின்னர் பல முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து தனக்கென சினிமாவில் இடம் பிடித்தார். தற்போது இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் விஜய் விரைவில் அரசியலிலும் இறங்க உள்ளார் என சொல்லப்படுகிறது. நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை ஒன்றிணைக்கும் விதமாகவும், நலத்திட்ட உதவிகள் செய்வதில் ஈடுபடும் விதமாகவும் விஜய் மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறார்.

அண்மையில் தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத் தொகை நேற்று வழங்கினார். சென்னை நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 1,500 மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். 2 கோடி செலவில் நடத்தப்பட்ட இந்த விழா மேடையில் பல விஷயங்களை விஜய் பகிர்ந்துகொண்டார்.

குறிப்பாக அரசியலில் நுழைவதற்கான அடித்தள பேச்சினை பேசினார். இந்நிலையில் இது குறித்து பிரபல பத்திரிகையாளர் ஷங்கர் பேட்டி ஒன்றில் விஜய் அரசியலுக்காக வளர்க்கபட்டார். அவரது படிப்படியான வளர்ச்சிகள் முழுவதும் அரசியலுக்காகவே உருவாக்கப்பட்டது. அது விஜய்யின் அப்பா போட்ட ஸ்கெட்ச் தான். ஆனால், இப்போ அவரை சுற்றி இருக்கும் அவருக்கு நெருக்கமான நபர்களின் ஆலோசனையில் தான் அரசியலில் இறங்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார் என அவர் கூறினார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 475

    0

    0