அஜித், விஜய் சேர்ந்து “உல்லாசம்” – 26 வருட உண்மை உடைந்தது!

Author: Shree
1 April 2023, 8:48 pm

தமிழ் சினிமாவில் கலாம் காலமாக இரண்டு பெரிய நடிகர்களுக்கு இடையில் பெரிய போர் நடந்து வருகிறது. சிவாஜி – எம்.ஜி.ஆர் காலத்தில் துவங்கி ரஜினி – கமல் , விஜய் – அஜித் என கோடி கணக்கான ரசிகர்கள் இரண்டு பிளவாக பிரிந்து ஒருத்தரை ஒருத்தர் தாழ்த்தியும் புகழ்ந்தும் பேசி வருவது தான் இந்த போட்டிக்கு காரணம்.

அப்படித்தானே 26 வருடத்திற்கு முன்னர் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆம், 1997ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் “உல்லாசம்” இப்படத்தை ஜே.டி மற்றும் ஜெர்ரி இயக்கி இருந்தார்கள். சமீபத்திய பேட்டி ஒன்றில் அப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய அவர்,

“உல்லாசம் படத்தை இயக்க ஆரம்பிக்கும் போது சில நண்பர்கள் அஜித் மற்றும் விஜய் இப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். காரணம் அப்போது தான் அவர்களுக்கு இடையே போட்டி ஆரம்பித்தது.

ஆனால், அந்த சமயத்தில் என்னுடைய கல்லூரி நண்பரான விக்ரம் சினிமாவில் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தார். அதனால் நாங்கள் விக்ரமை நடிக்கவைத்தோம்” என கூறியுள்ளனர். பின்னர் அஜித்தும் , விக்ரமும் சேர்ந்து நடித்தார்கள். ஒரு வேலை விஜய்யும் அஜித்தும் சேர்ந்து அப்படத்தில் நடித்திருந்தால் அது இன்று வரலாறு பேசும் படமாக இருந்திருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி