நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான விஜய், 90களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர், பீஸ்ட் இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றது.
தற்போது, அதனைத் தொடர்ந்து, தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.
இப்படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ், சங்கீதா, சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் என ஒரு பிரபல நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய்.
வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தளபதி விஜய் மற்றும் MM மானஸ்வி குரலில் ‘ரஞ்சிதமே’, சிம்பு குரலில் ‘தீ தளபதி’ என 2 பாடல்கள் வெளியாகி சூப்பர் ட்ரெண்ட் ஆகி வருகிறது. கடந்த மாதம் 5ம் தேதி வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரஞ்சிதமே ரஞ்சிதமே வெளியாகி, யூடியூப்பில் பல மில்லியன் வீவ்ஸ்களை கடந்து புதிய சாதனை படைத்தது.
வாரிசு படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு திரைப்படமும் ரிலீசாக உள்ளது. இதனால் இருவருக்கும் சமமான அளவில் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவில், பேசிய போது நடிகர் விஜய் “குஷ்பூ மேடத்தை பார்த்தால் எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது என்றும், அப்போது கேர்ள் பிரண்ட் உடன் சென்று கமலா தியேட்டரில் சின்ன தம்பி படத்தை பார்த்த ஞாபகம் தான் வருது.” என தெரிவித்தார்.
இதை சொன்னபோது அரங்கத்தினர் ஆரவாரத்தில் கைத்தட்டினர். அந்த சமயத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜே ரம்யா, “Sir sir sir அந்த girlfriend பேர் என்ன சார்?” என கேட்க, விஜய்யும் விளையாட்டாக, “நீ கொஞ்சம் வெளிய இருமா போ மா..” என தெரிவித்தார்.
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
வெறித்தனமான டிரைலர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
கோவை தடாகம் சாலையில் உள்ள அவிலா கான்வெண்ட் என்ற தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை சரி…
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக இன்று வரை பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகள் நீடித்து வருகின்றன. 2019ஆம்…
இயக்குனர் டூ காமெடி நடிகர் அஜித்தின் “ரெட்”, சூர்யாவின் “மாயாவி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. எனினும் இத்திரைப்படங்களை தொடர்ந்து…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலில் இன்று…
This website uses cookies.