சரத்குமாரை சந்திக்க சென்ற விஜய்; அரசியல் காரணமா?; தீயாய் பரவும் ஃபோட்டோ;
Author: Sudha12 July 2024, 12:16 pm
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வெளிவந்த வாரிசு படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தார் சரத்குமார். அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றிருக்கிறார், சரத்குமார் ராதிகா இவர்களின் மகன் ராகுல். அப்பாவும், விஜய்யும் சேர்ந்து நடிப்பதை பார்க்கச் சென்றாராம்.
அவருக்கு விஜய் என்றால் ரொம்ப பிடிக்குமாம்.ராதிகாவுடனும் இணைந்து நடித்திருக்கிறார் விஜய். எனவே ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் விஜய்க்கு ரொம்பவே நெருக்கம் என சொல்லப் படுகிறது இந்நிலையில் ஒரு நாள் வாரிசு பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில் சரத்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார் விஜய். அந்த நேரத்தில் சரத்குமார் வீட்டில் இல்லாததால் விஜய்க்கு ஃபோன் செய்து சாரி சொல்லியிருக்கிறார்.
அதற்கு விஜய்யோ சார், நான் உங்களை பார்க்க வரவில்லை உங்கள் மகனைப் பார்க்க வந்தேன்.ராகுலுடன் சிறிது நேரம் விளையாடி விட்டு போகலாம் என வந்தேன் என்று சொல்லியிருக்கிறார்.
இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் இன்னும் விஜய் குழந்தை போலவே குழந்தை மனதோடு இருக்கிறார் என கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.