வெங்கட் பிரபுவை நம்பி நடுத்தெருவுக்கு வந்த விஜய்…? குடிகார பயலுங்க கூட சவகாசம் வச்சா இப்படி தான் !

Author:
26 July 2024, 2:41 pm

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “கோட்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடிக்கிறார்கள் .

இதுவரை இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் பெரிதாக விஜய் பாடல்களுக்கு இருக்கும் வரவேற்பு இதற்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் கோட் படத்தின் ரிலீஸில் மிகப்பெரிய பிரச்சனை இருப்பதாகவும் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாது என்றும் கூறப்படுகிறது. ஆம் படத்தின் ஏகப்பட்ட வேலைகள் பெண்டிங் இருக்கிறதாம்.

Goat

தற்போது வரை முதல் பாதி படத்திற்கான வேலைகள்தான் முடிவடைந்து இருக்கிறது. அதிலே ஏகப்பட்ட பெண்டிங் வேலைகளும் இருக்கிறதாம். அதற்குள் படத்தின் ஆடியோ லான்ச் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக பல படத்தின் டெக்னீசியன்கள் அந்த வேலைகள் இறங்கி விட்டதால் படத்தின் வேலைகள் அப்படியே நின்று கிடக்கிறது.

அது தவிர யுவன் சங்கரின் ரெக்கார்டிங் ஒர்க் வேறு பாக்கி இருக்கிறது. இப்படியான நேரத்தில் விஜய் வெங்கட் பிரபுவையும் அவரது டீமையும் பாராட்டி சூப்பராக வந்திருக்கிறது தெறிக்க விட்டுட்டீங்க என்று கூறிவிட்டு விட்டு கிளம்பி விட்டாராம். படம் வெளிநாட்டில் ரிலீஸ் ஆகவேண்டும் என்றால் 20 நாட்களுக்கு முன்னாடியே அனைத்து வேலைகளும் முடிவடைந்து இருக்க வேண்டும்.

அப்போதுதான் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியும். அப்படி பார்த்தால் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் எல்லா வேலைகளும் முடித்து அனுப்பினால் மட்டும் தான் ரிலீஸில் எந்த பிரச்சனையும் வராமல் தடுக்க முடியும். தற்போது விஜய் அரசியல் விஷயங்களில் அதிக நாட்டத்தை செலுத்தி வருவதால் படத்தை முழுக்க முழுக்க வெங்கட் பிரபுவை நம்பியே விட்டுவிட்டார்.

Vijay - Updatenews360

அது மட்டும் இல்லாமல் விஜய் நடித்து வெளியாகும் கடைசி படம் இதுவாகத்தான் இருக்கும் என்பதால் ஏகோபித்த ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக “கோட்” திரைப்படம் இருந்து வருகிறது. இப்படியான நேரத்தில் இந்த திரைப்படத்தில் பல சிக்கல்களை இருப்பதை அறிந்த ரசிகர்கள் விஜய் வெங்கட் பிரபுவை நம்பி கடைசி நேரத்தில் நடுத்தெருவுக்கு வரப் போகிறார் என கூறுகிறார்கள். மேலும் சிலர் இதனால்தான் வெங்கட் பிரபு போன்ற குடிகார கும்பல்களுடன் சவகாசம் வைத்துக் கொள்ளக் கூடாது என மோசமாக விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள்.

  • Annamalai vs Cool Suresh Whip Trendஅண்ணாமலையை தொடர்ந்து கூல் சுரேஷ் சாட்டையடி… வைரலாகும் வீடியோ..!
  • Views: - 181

    0

    0