ஊரே கொண்டாடும் DRAGON… படத்தை பார்த்து விஜய் சொன்ன அந்த வார்த்தை!
Author: Udayachandran RadhaKrishnan24 February 2025, 12:29 pm
ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படம்தான் DRAGON. பிரதீப் ரங்நாதன் நடிக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இதையும் படியுங்க: கணவருடன் கவர்ச்சி குத்தாட்டம்… நைட் பார்ட்டியில் கீர்த்தி சுரேஷ்!
படம் கடந்த 22ஆம் தேதி வெளியாகியிருந்தது.படம் ரிலீசாகும் முன்னரே சிறப்பு காட்சியை பார்த்த சிம்பு படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் என டுவிட் செய்திருந்தார். இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடைய ஏஜிஎஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ச்சனா கல்பாத்தி, விஜய்க்கு டிராகன் படத்தின் சிறப்பு காட்சியை காட்டியுள்ளார். படத்தை பார்த்து வியந்து பாராட்டியுள்ளார் விஜய். ஏற்கனவே பிகில், கோட் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.