என் தம்பிக்காக… வாழ்த்திய விஜய் : அட்லீ முதல் வருண் வரை!
Author: Udayachandran RadhaKrishnan24 December 2024, 6:20 pm
இயக்குநர் அட்லீ, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து பெரிய ஹிட் படங்களை கொடுத்தார்.
BABY JOHN படக்குழுவை மனதார பாராட்டிய விஜய்
பின்னர் பாலிவுட்டில் என்ட்ரியான அட்லீ, எஸ்ஆர்கேவை வைத்து ஜவான் என பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்து மிரள வைத்தார்.
இதையும் படியுங்க : கீர்த்தி சுரேஷ் போட்டோ… மாமியார் வீட்டில் புகைச்சல் : கணவர் போட்ட கண்டிஷன்!!
ஜவான் படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் ஆனதால் பாலிவுட்டிலே செட்டில் ஆனார் அட்லீ. தற்போது அவர் தெறி படத்தை இந்தியில் ரீமேக் செய்துள்ளார்.
வருண் தவான், கிர்த்தி, வாமிகா கபி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள பேபி ஜான் திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை தமிழில் கீ படத்தை இயக்கிய காளிஸ் இயக்குகிறார்.
நாளை உலகம் முழுவதும் பேபி ஜான் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு அட்லீக்கு விஜய் வாழ்த்து கூறியுள்ளார். பேபி ஜான் படக்குழுவுக்கு விஜய் வாழ்த்து கூறிய நிலையில், அட்லி, கீர்த்தி சுரேஷ் மற்றும் வருண் தவான் நன்றி தெரிவித்துள்ளனர்.