அவரை வெளியவே நிக்க சொல்லு…. அம்மாவை மட்டும் உள்ளே கூப்பிடுங்க – மனசாட்சி இல்லாத மனுஷன் விஜய்!

Author: Shree
11 May 2023, 7:21 pm

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பல வெற்றிகளை பார்த்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். தந்தை எஸ்ஏசியின் உதவியால் விஜய் ஆரம்பக்கட்டத்தில் சினிமாவில் நிலைத்திருக்க முடிந்தது. அவரது உதவி இருந்ததால் தான் இன்று இந்த உயரத்திற்கு வர முடிந்தது.

ஆனால், அதையெல்லாம் மறந்துவிட்டு விஜய் பெற்ற தந்தை என்று கூட பார்க்காமல் அவருடன் ஜென்ம விரோதியாக இருந்து வருவது பல மேடைகளில் வெளிப்படையாகவே தெரிந்தது. இது அவரது தந்தை எஸ்ஏசிக்கு மட்டும்மல்லாமல் ரசிகர்களையும் வருத்தமடைய செய்தது.

இது குறித்து பேட்டி ஒன்றில் எஸ்ஏசி, “நானும் விஜய்யும் பேசாமல் இருப்பது உண்மைதான். அதை நான் எப்போதுமே மறைத்ததில்லை. ஒருகட்டம்வரைதான் பிள்ளைகள் நமது பேச்சை கேட்பார்கள். பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால் அவர்களுடைய ஆட்டிட்யூட் மாறிவிடும். இது அனைவரது வீட்டிலும் நடக்கக் கூடிய ஒன்றுதான். அப்படிதான் ஓர் தந்தையாக நான் கூறும் சில விஷயங்கள் அவருக்கு பிடிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் அவ்வளவாக பேசிக் கொள்வதில்லை” என்றார்.

இதையடுத்து விஜய் தனது அம்மாவுடன் இருக்கும் போட்டோ ஒன்று சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது பெற்றோரின் 50வது திருமண நாள் விழாவை கொண்டாடும் விதமாக விஜய் அவர்களது வீட்டுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அவரது அப்பா இல்லை என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

இது குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யார் பாலு பேட்டி ஒன்றில், விஜய்யை பார்க்க அம்மா, அப்பா இருவரும் சென்று விஜய் வீட்டின் கேட் வெளியே நின்று நாங்கள் வந்திருக்கிறோம் என விஜய்யிடம் கூற சொல்லி வாசலிலே அரைமணி நேரம் காரில் அமர்ந்து காத்திருந்தார்களாம். பின்னர் விஜய் அவரது காவலாளியை அனுப்பி அம்மாவை மட்டும் வரச்சொல்லுங்க என கூறியுள்ளார் என அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். அப்படி என்னத்தான் விஜய்க்கு தன் அப்பா மீது கோபம்? என ரசிகர்கள் அவரை விமர்சித்துள்ளனர்.

  • Vedhika Marriage News அவசர அவசரமாக நடந்த நடிகை ‘வேதிகா’ கல்யாணம்…அவரே வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் ஷாக்.!