விஜய் உடன் 20 வருஷ பகை…. ஒருவழியா ஒன்று சேர்ந்து வேற லெவல் ஹிட் கொடுக்கப்போகும் தளபதி 68!
Author: Shree23 May 2023, 10:42 am
தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் தயாரிக்கிறார். ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து மீதமுள்ள காட்சிகளை சென்னையில் படமாக்கி வருகிறார்கள். சென்னையில் உள்ள ஆதித்தராம் ஸ்டூடியோவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக சமீபத்திய தகவல்கள் கூறுகிறது.
மேலும் இதையடுத்து ஒரு சில முக்கியமான காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்க உள்ளார்களாம். இதையடுத்து படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரம் எடுக்கும் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில் லியோ படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக விஜய் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார்.
குறிப்பாக வெங்கட் பிரபு படம் என்றாலே இசை யுவன் ஷங்கர் ராஜா தான். இருப்பார். ஆனால் யுவன் ஷங்கர் ராஜா விஜய்க்கு இடையில் 20 ஆண்டுகள் பகை இருக்கிறது. இது இந்த திரைப்படத்தின் மூலம் உடையப்போகிறது. யுவன் ஷங்கர் ராஜா – விஜய் கூட்டணி தளபதி 68 படத்தில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.