தமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்புலமும், சிபாரிசும் இல்லாமல் தங்களது கடின உழைப்பின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் விஜயகாந்த் பின்னர், தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் தனி இடத்தையும் தமிழ் திரையுலகில் பெற்றார். ரைஸ் மில் நடத்திக்கொண்டிருந்த விஜயராஜ், சினிமாவிற்காக விஜயகாந்தாக மாறினார்.
கோலிவுட்டில் கேப்டனாக வலம் வந்த விஜயகாந்த். நடிகர் – நடிகைகளுக்கு எந்த ஒரு பிரெச்சனை என்றாலும் முன்வந்து உதவி செய்து நேரம் பாராமல் திரைத்துறைக்காக பணியாற்றியவர். யார் மனதையும் நோகடிக்காது, அனைவர்க்கும் நியாயமாக சமமாக நடந்து கொள்வதில் மிகுந்த கவனமாக இருப்பவர் விஜயகாந்த்.
பெரிய நடிகர், சீனியர் நடிகர் என்ற வித்தியாசம் பாராமல் அனைவரது நிறை குறைகளை அனுசரித்து வேண்டியதை செய்து கொடுத்து வந்தவர். இவரால் பலன் பெற்றவர்கள், பிரபலம் அடைந்தவர்கள் ஏராளம். உடல்நலம் சரியில்லாமல் திரையுலகு மற்றும் அரசியல் பொதுப்பணிகளிலும் பெரிதும் ஈடுபடாமல் இருந்து வரும் விஜய்காந்த் அவர்கள் குறித்து பிரபல நடிகர் நடிகைகள் தங்களது பேட்டிகளில் பலரும் அறிந்திராத அவரது நற்குணங்கள் குறித்து பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் அதோடு வெளியே வராமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். அவரது ரசிகர்களுக்கும் பெரிய வருத்தத்தை கொடுத்து வருகிறது.
இந்நிலையில், தான் விஜயகாந்த் மகன் பிரபாகரன் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். கேப்டன் உடல் நலம் சற்று பின்னடைவாக தான் இருக்கிறது. ஆனால், அதே நேரத்தில் அவர் விரைவில் குணமடைந்து. 100 வயது வரை வாழ்வார் என்று நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். அவரை மீண்டும் பழையபடி பேசுவதற்கும் நடப்பதற்கும் முயற்சிகள் எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
புரட்டி எடுத்த பூரான் 2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக,லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரன்…
தமன்னாவின் ஜிம் வீடியோ வைரல் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி திரையுலகில் நீண்ட காலமாக முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா.'கேடி' படத்தில் வில்லியாக அறிமுகமாகி…
வைகோவைப் போல் திருமாவளவனையும் திமுகவினர் காலி செய்கிறார்கள் என தவெக பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். சென்னை: தமிழக வெற்றிக்…
IPL 2025 தொடரின் 8ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இன்று இரவு…
This website uses cookies.