விஜய்யின் புதிய படத்தில் கேமியோ ரோலில் விஜயகாந்த்?.. வெளியான புதிய தகவலால் ரசிகர்கள் ஷாக்..!

Author: Vignesh
2 January 2024, 3:09 pm

மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் சிறப்பான முறையில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பல ஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல், கரகோஷங்களுடன் அவரது உடல் வீதியெங்கும் வரலாறு பேசும் சம்பவமாக இருந்தது.

லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சென்னை தேமுதிக அலுவலகத்தில் 50 கிலோ எடை கொண்ட சந்தன பேழைக்குள் விதைக்கப்பட்டார் விஜயகாந்த். இவரின் மறைவால் தமிழகமே துக்கத்தில் உறைந்தது.

vijayakanth

முன்னதாக விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பின்னர் சினிமாவில் பெரிதாக நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. கடைசியாக, இவர் ஹீரோவாக நடித்த படம் என்றால் அது விருத்தகிரி தான். இதன் பின்னர் தனது மகன் ஹீரோவாக நடித்த சகாப்தம் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

அரசியலில் முழு கவனம் செலுத்தி வந்த விஜயகாந்த்துக்கு, இது மட்டுமின்றி உடல்நல குறை ஏற்பட்டதும், சினிமாவில் இருந்து விலகியதற்கு ஒரு காரணம் என்று சொல்லலாம். ஆனால், இவர் இறப்பதற்கு முன் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் கேமியோ ரோலில் நடித்துள்ளார். விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக ஏற்கனவே, சினிமா வட்டாரத்தில் முணுமுணுக்கப்பட்டு இருந்தது.

vijay antony - updatenews360 gg

இது செம சர்ப்ரைஸ் என ஒரு பக்கம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவதற்குள் இது உண்மையில்லை என்ற தகவலும் தற்போது, உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்க விஜயகாந்த் இடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், ஆனால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது என்றும் கூறப்படுகிறது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!