விஜயகாந்த் – அஜித் இணைந்து நடிப்பில் மாஸ் திரைப்படம்.. அட கடவுளே இப்டி ஆகிருச்சே..!

Author: Udayachandran RadhaKrishnan
25 December 2022, 9:30 pm

தமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்புலமும், சிபாரிசும் இல்லாமல் தங்களது கடின உழைப்பின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் விஜயகாந்த் மற்றும் நடிகர் அஜித். பின்னர், தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் தனி இடத்தையும் தமிழ் திரையுலகில் பெற்றவர்கள். ரைஸ் மில் நடத்திக்கொண்டிருந்த விஜயராஜ், சினிமாவிற்காக விஜயகாந்தாக மாறினார்.

பல திரைப்படங்களில் சாக்லேட் பாயாக நடித்த அஜித், பில்லா படத்திற்கு பின் பக்கா ஆக்‌ஷன் ஹீரோவாக மாறினார். அதன்பின் மங்காத்தா படத்தின் வெற்றி அஜித்தின் மார்க்கெட் மதிப்பை அதிகரித்தது. இந்நிலையில், தற்போது, அஜித்தும், விஜயகாந்தும் இணைந்து நடிக்கவிருந்த திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

ajith updatenews360

விஜயகாந்த் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த சமயம், இதற்கான முயற்சி எடுக்கப்பட்டது. ஒரு பெரிய சினிமா நிறுவனம் முன்னெடுத்து, அப்போது, திரைப்படக்கல்லூரியில் படித்த சிலரை வைத்து, ஒரு அருமையான கதையை தேர்ந்தெடுத்து, அதை பல மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டிருந்தனராம். ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது. இது குறித்து கேள்விப்பட்ட ரசிகர்கள் நடக்காமல் போனதை எண்ணி வருந்தி வருகின்றனர்.

  • ajith kumar team won second place belgium car race விபத்துக்கு கிடைத்த வெகுமதி- கார் ரேஸில் மீண்டும் தடம் பதித்த அஜித்குமார்! மாஸ் காட்டுறாரே!