சோறு திங்க தான் வரீங்களா.. சாப்பாடு விஷயத்தில் கறார் காட்டிய தயாரிப்பாளருக்கு பளார் விட்ட விஜயகாந்த்..!

Author: Vignesh
29 December 2023, 2:30 pm

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி வீட்டிலேயே முடங்கினார். நேற்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை தெரிவித்தது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்படுவதாக தெரிவித்தது.

இதனிடையே, விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், நேற்று 9 மணிக்கு மருத்துவ அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து காலை விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- கேப்டன்‌ விஜயகாந்த்‌ அவர்கள்‌ நுரையீரல்‌ அழற்சி காரணமாக மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர்‌ ஆதரவுடன்‌ சிகிச்சை பெற்றிருந்தார்‌. மருத்துவ பணியாளர்களின்‌ கடின முயற்சி இருந்தபோதிலும்‌ அவர்‌ நேற்று காலை 28 டிசம்பர்‌ 2023 காலமானார்‌.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்தின் உடல் இன்று மாலை சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்று பிற்பகல் 1.30 மணி வரை விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. அதன்பின்னர் தீவுத்திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மாலை 5 மணியளவில் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்தின் மரணம் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக அவர் பல பேருக்கு செய்துள்ள உதவிகள் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது இன்று திரைத்துறையில் மிப்பெரிய நடிகர்களாக இருந்து வரும் விஜய், தனுஷ் குடும்பம், வடிவேலு , சரத்குமார் என பல பேரை திரையில் ஜொலிக்க வைத்தவர் விஜயகாந்த்.

DM Vija

இந்நிலையில் விஜயகாந்த் செய்த பேருதவிகளை பட்டியலிட்டு அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் பிரபலங்கள். அந்தவகையில், அதாவது கஜேந்திரா படப்பிடிப்பின் போது இயக்குனருக்கும், துணை இயக்குனருக்கும் நடந்த பிரச்சனையை கேப்டன் சரி செய்த விதம் குறித்துதான் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

படப்பிடிப்பின் போது படத்தின் தயாரிப்பாளர் படப்பிடிப்பு தாமதம் ஆனதும், இரண்டு துணை இயக்குனர்களை ஆவேசத்துடன் நீங்கள் சோறு திங்க தான் வரிங்களா என்று கூறியுள்ளார். இதனால், அவர்கள் இருவரும் மனமுடைந்து போயியுள்ளனர். இதனால் அவர்கள் இருவரும் மூன்று நாட்களாக ஷூட்டிங் தளத்தில் மதிய உணவு சாப்பிடாமல் இருந்து வந்துள்ளனர்.

Kanth

இதை ஒருநாள் கேப்டன் விஜயகாந்த் கவனித்துள்ளார். அப்போது, அவர்கள் இருவரையும் அழைத்து என்ன பிரச்சனை என்று கேட்ட பொழுது தயாரிப்பாளர் இப்படி பேசி விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கோபமடைந்த கேப்டன் விஜயகாந்த் தயாரிப்பாளரை அழைத்து சாப்பாடு விஷயத்தில் இப்படியா பேசுவது என்று கூறிவிட்டு இனிமேல் அவர்கள் இருவருடன் நானும் உங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தின் சாப்பாட்டை சாப்பிட மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதற்கு பிறகு விஜயகாந்த்க்கும் அந்த இரண்டு துணை இயக்குனர்களுக்கும் கேப்டன் வீட்டிலிருந்துதான் தொடர்ந்து 15 நாட்கள் உணவு வந்தது என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் இந்த சம்பவத்தை தற்போது பகிர்ந்து உள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 323

    0

    0