ஷூட்டிங்கை நிறுத்த சொன்ன விஜயகாந்த்.. கெஞ்சிய தயாரிப்பாளர் : அந்த மனசுதான் சார் நம்ம கேப்டன்!!!

Author: Udayachandran RadhaKrishnan
31 December 2022, 1:15 pm

தமிழ் சினிமாவின் கேப்டன் என்று போற்றப்படும் விஜயகாந்தின் பெருந்தன்மையை குறித்து சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு அள்ளி அள்ளித் தரும் வள்ளலாக திகழ்ந்தவர் விஜயகாந்த். அதே போல் பசியோடு யார் வந்தாலும் அவரின் பசியை போக்கிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்.

அதே போல் சக நடிகர்களை மதிப்பதிலும் பாராட்டுவதிலும் தாராள மனதுடன் திகழ்ந்தவர். மேலும் தயாரிப்பாளருக்கு எந்த வித நஷ்டமும் ஏற்படக்கூடாது என்பதிலும் கண்ணாக இருப்பவர். இவ்வாறு மிகச்சிறந்த பண்பாளராக திகழும் விஜயகாந்த் ஒரு சிறு விசயத்திற்காக கோபப்பட்டது குறித்து பிரபல தயாரிப்பாளர் காஜா மைதீன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

2001 ஆம் ஆண்டு விஜயகாந்த், ஷாக்சி சிவானந்த், பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “வாஞ்சிநாதன்”. இத்திரைப்படத்தை காஜா மைதீன் தயாரித்திருந்தார்.

இத்திரைப்படத்தின் பூஜை போடப்பட்ட அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே தயாரிப்பாளர் அலுவலகத்தில் பல விநியோகஸ்தர்கள் குவிந்து கிடந்தார்களாம். இவ்வாறு பூஜை போடப்பட்ட சில நிமிடங்களிலேயே நல்ல வியாபாரம் பார்த்துள்ளது இத்திரைப்படம்.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு நாள் விஜயகாந்தை கவர்ந்துவிட வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர் விஜயகாந்த்திற்கு ஸ்பெஷலாக ஒரு கேரவன் தயார் செய்திருந்தாராம். “கேப்டன் சார், கேரவன் இருக்கு, நீங்க பயன்படுத்திக்கலாம்” என கூறினாராம்.

இதனை கேட்ட விஜயகாந்த், “ஷூட்டிங்கை பேக்கப் பண்ணுங்க” என்று கூறினாராம். இதனை கேட்ட தயாரிப்பாளர் அதிர்ந்துபோய்விட்டாராம். “ஏன் சார், என்னாச்சு?” என தயாரிபபளர் கேட்க, “நான் இங்க உழைக்க வந்திருக்கேனா? ஓய்வெடுக்க வந்திருக்கேனா?” என கத்தினாராம். அதன்பின் அந்த கேரவனையே படப்பிடிப்பில் இருந்து வெளியேற்றச் சொல்லிவிட்டாராம் தயாரிப்பாளர்.

  • Keerthy Suresh Take Language class for Varun Dhawan வருண் தவானுக்கு லவ் சொல்ல கற்றுக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் வீடியோ!
  • Views: - 715

    5

    0