வறுமையின் பிடியில் சாக கிடக்கும் தயாரிப்பாளரிடம் வீட்டை எழுதி வாங்கிய பிரபல நடிகர்!

Author: Shree
21 March 2023, 9:24 pm

வறுமையின் பிடியில் சாக கிடக்கும் தயாரிப்பாளரிடம் வீட்டை எழுதி வாங்கிய பிரபல நடிகர்!

கடந்த சில நாட்களாக தயாரிப்பாளர் ஏ. வி துரை குறித்த செய்திகள் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. பல கோடி முதலீடு செய்து படங்களை எடுத்த தயாரிப்பாளர் ரூ50 ,100க்கே மிகவும் கஷ்டப்பட்டு வாடி வதைக்கும் வறுமையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ஏமாற்றியவர்கள் லிஸ்டில் நடிகர் விஜயகாந்தும் இடம்பெற்றுள்ளார். ஆம், 2004 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான கஜேந்திரா படத்தை தயாரித்தவர் ஏ. வி துரை தான். ஆனால், இப்படம் வெளியாகி தோல்வியை சந்தித்து அவருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

எந்த அளவிற்கு என்றால் அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கே சம்பளம் தர முடியவில்லையாம். அப்படி மாட்டிக்கொண்ட விஏ துரையிடம் விஜயகாந்த் சம்பளத்திற்கு பதிலாக அவரது வீட்டை எழுதி வாங்கி கொண்டாராம்.

தயாரிப்பாளரின் நிலைமையை சற்று புரிந்துக்கொள்ளாத விஜயகாந்த் அவ்வளவு மோசமாக நடந்துக்கொண்டாரா? என பலரால் நம்ப கூட முடியவில்லை. ஒரு வேலை அவர் அப்படி செய்யாதிருந்தால் இன்று இந்த நிலமைக்கு ஏவி துரை வந்திருக்கவே மாட்டார் என்கிறது சினிமா வட்டாரம்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 942

    19

    18