ஊருக்கே உதவி செய்தவர் கூட பிறந்தவரை தவிக்க விட்டுட்டாரே – ஏழ்மையில் தவிக்கும் விஜயகாந்த் தம்பி!
Author: Rajesh4 January 2024, 5:37 pm
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். பின்னர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அடுத்த மறுநாள் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செய்து அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள்.
தொடர்ந்து விஜயகாந்த் செய்த பல்வேறு நற்பணிகள், ஏழை எளிய மக்களுக்கு உதவிகள், திரைதுரைசேர்ந்த பலருக்கு வாழ்வளித்தது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. விஜயகாந்தின் நற்குணங்கள் பற்றி தான் நாம் நிறைய கேள்விப்பட்டோம். ஆனால் தற்போது ஒரு ஷாக்கிங் தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, விஜயகாந்தின் உடன் பிறந்த தம்பிகளான பால்ராஜ் மற்றும் செல்வராஜ் இருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இதில் செல்வராஜ் மதுரையில் பிளாஸ்டிக் பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறாராம். மிகவும் எளிமையான ஏழ்மை வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பிறகு தனது பூர்வீக வீட்டுக்கு செல்வதை குறைத்துக்கொண்டாராம். அவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது