விஜயகாந்தின் இந்த மோசமான நிலைமைக்கு மாந்திரீகம் தான் காரணம்..-உண்மையை உடைத்த பிரபலம்..!
Author: Vignesh13 May 2023, 2:01 pm
80 மற்றும் 90 களில் நடிகர் விஜயகாந்த் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர். நடிகர் விஜயகாந்த் 1978 முதல் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கி பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது.
இதனிடையே, இவரின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் வெளிவந்து இவருக்கு வெற்றியை பெற்று வசூலை ஈட்டி கொடுத்தது. மேலும், இந்த படத்தின் மூலம் இவருக்கு கேப்டன் என்னும் அடை மொழியை பெற்று கொடுத்தது.
விஜயகாந்த்தின் கிராமத்து பாணியில் நடிக்கும் நடிப்பு தான் பட்டித்தொட்டியெல்லாம் பிரபலமடைய வைத்தது. இவரின் நடிப்பில் கேப்டன் பிரபாகரன், கஜா, ரமணா போன்றத் திரைப்படங்கள் மக்களை இன்று வரை ஈர்த்து வருகிறது.
விஜயகாந்த் நடிகர் மட்டுமல்ல இயக்குநராகவும் தயாரிப்பாளர் என பன்முக திறமையாளராக வலம் வந்தவர். மேலும், விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்து, பின்னர் அரசியலுக்கு சென்று மக்களின் ஆதரவால் 2முறை எம்எல்ஏ வாக இருந்து இருக்கிறார்.
இதனை தொடர்ந்து அரசியலில் ஸ்ட்ராங்காக களமிறங்கி எதிர்கட்சி தலைவராகவே அமர்ந்த இவர் உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தினால் தற்போது அரசியலில் தலைகாட்டாமல் இருந்து வருகிறார். பின்னர் உடல்நலக்குறைவால் உடல் மெலிந்து விஜயகாந்த் அடையாளம் தெரியாமல் மாறிப்போனார்.
தற்போது, இவரது மனைவியும் மகனும் கட்சியை பார்த்து வரும் நிலையில், பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு அளித்த பேட்டி ஒன்றில், விஜயகாந்தின் உடல் ஆரோக்கியம் சீராக அமையாததற்கு காரணம் அவருடைய மனைவிதான் என்று கூறுகிறார்களே அது உண்மையா? என கேள்வி கேட்டப்பட்டது.
இதற்கு பதில் அளித்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, இதை நானும் பத்திரிகைகளில் தான் பார்த்தேன் என்றும், அதாவது அவருக்கு ஏதோ மாந்திரீகம் செய்துவிட்டதாகவும் ஸ்லோ பாய்ஷன் கொடுத்ததாகவும், அவரின் வளர்ச்சியை தடுப்பதற்காகவும் இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று அந்த செய்திகளில் பல தகவல்கள் வெளிவந்ததாகவும், அது எந்த அளவுக்கு உண்மை என்று தனக்கும் தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், விஜயகாந்தின் நண்பனான ராவுத்தர் தான் விஜயாந்தின் வாழ்க்கையை வெளிச்சமாக்கியவர் என்றும், விஜயகாந்தும் ராவுத்தரும் அப்படி இணைப்பிரியாத நண்பர்களாக இருந்தார்களாம் ஆனால் இவர்கள் இருவரும் பிரிந்ததற்கு விஜயகாந்த் திருமண வாழ்க்கை தான் காரணம் என்று கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.