வாரி வழங்கும் வள்ளல்.. தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்: கதறி அழும் தொண்டர்கள்..!

மதுரை மாவட்டம் விருதுநகரில் 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ந் தேதி பிறந்தவர் தான் விஜயகாந்த். இவரது நிஜப்பெயர் விஜயராஜ் சினிமாவிற்காக விஜயகாந்த்தாக மாறினார். தமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்புலமும், சிபாரிசும் இல்லாமல் தங்களது கடின உழைப்பின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் விஜயகாந்த். பின்னர், தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் தனி இடத்தையும் தமிழ் திரையுலகில் பெற்றார்.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னர் ரைஸ் மில் நடத்திக்கொண்டிருந்த விஜயராஜ், சினிமாவிற்காக விஜயகாந்தாக மாறினார். திறமையான நடிகராக கோலிவுட்டில் கேப்டனாக வலம் வந்த விஜயகாந்த் மிகச்சிறந்த மனிதர் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம் தான். நடிகர் – நடிகைகளுக்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முன்வந்து உதவி செய்து நேரம் பாராமல் திரைத்துறைக்காக பணியாற்றியவர். யார் மனதையும் நோகடிக்காது, அனைவர்க்கும் நியாயமாக சமமாக நடந்து கொள்வதில் மிகுந்த கவனமாக இருப்பவர் விஜயகாந்த்.

பெரிய நடிகர், சீனியர் நடிகர் என்ற வித்தியாசம் பாராமல் அனைவரது நிறை குறைகளை அனுசரித்து வேண்டியதை செய்து கொடுத்து வந்தவர். இவரால் பலன் பெற்றவர்கள், பிரபலம் அடைந்தவர்கள் ஏராளம். உடல்நலம் சரியில்லாமல் திரையுலகு மற்றும் அரசியல் பொதுப்பணிகளிலும் பெரிதும் ஈடுபடாமல் இருந்து வரும் விஜய்காந்த் அவர்கள் குறித்து பிரபல நடிகர் நடிகைகள் தங்களது பேட்டிகளில் பலரும் அறிந்திராத அவரது நற்குணங்கள் குறித்து பகிர்ந்துள்ளனர்.

மேலும், சினிமாவை கனவாக கொண்டு வளர்ந்த திறமையான இளம் தலைமுறையினர் பலரை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்த பெருமை விஜயகாந்தையே சேரும். திரைப்பட கல்லூரி பட்டதாரிகளை இயக்குனராக அறிமுகப்படுத்தி உதவி செய்த ஒரே நடிகர் விஜயகாந்த் தான். மேலும் சினிமாவில் வாய்ப்புகள் தேடி வரும் அத்தனை பேரின் பசியை போக்கியவர் விஜயகாந்த். வயிறார சாப்பாடு போட்டு அதில் சந்தோஷப்படக்கூடய ஒரே நல்ல மனிதர் அவர். மேலும் விஜயகாந்தின் படப்பிடிப்புகளில் மட்டும் தான் அசைய உணவுகள் அதிகம் இருக்கும் ஊர்வன , பறப்பன நடப்பன என அனைத்தும் இருக்கும்.

விஜயகாந்த் ராவுத்தர் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தார். அங்கிருந்து தான் சாப்பாடு வரும். விஜயகாந்த் ஷூட்டிங்கிற்கு போனால் வயிறு நிறைஞ்சிடும்பா என சொன்ன நடிகர்கள் பலர் உள்ளனர். அவர் போட்ட சோறு தான் இன்றைக்கும் அவரை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. எம்ஜியாருக்கும் விஜயகாந்திற்கும் நல்ல நட்பு இருந்தது. மற்ற நடிகர்களின் டீ, காபி கொடுத்தே படம் எடுப்பார்கள். ஆனால், விஜயகாந்த் ஷூட்டிங்கில் ஹார்லிக்ஸ், பூஸ்ட், சூப், அசைவம் , சைவம் என குறையாமல் சாப்பாடு போட்டுக்கொண்டே இருப்பார்கள். அவ்வளவு நல்ல மனம் கொண்ட மனிதர் விஜய்காந்த்த்.

முன்னதாக, சில வாரங்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் விஜயகாந்த் இன்று காலை 28 ஆம் தேதி டிசம்பர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் 71 வயதில் காலமானார். இச்சம்பவம் தேமுதிக கட்சியின் தொண்டர்களையும் விஜயகாந்தின் ரசிகர்கள், பிரபலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Poorni

Recent Posts

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

7 minutes ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

27 minutes ago

செந்தில் பாலாஜி SAFE… அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் உச்சநீதிமன்றம் உத்தரவு!

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…

31 minutes ago

ஒரே ஒரு கேள்வி இப்படி பேச வைச்சிடுச்சே! ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஒரு நிலைமையா வரணும்?

ஸ்ருதிஹாசனின் பிரேக்கப்  கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார்.  இருவரும் லிவ்…

1 hour ago

பாஜக முக்கியப் புள்ளி படுகொலை… நள்ளிரவில் பின்தொடர்ந்த கும்பல் வெறிச்செயல்!

புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…

2 hours ago

நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!

மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…

2 hours ago

This website uses cookies.