இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியல? “என்ன மன்னிச்சிடு சாமி” கேப்டன் நினைவிடத்தில் கதறிய விஷால்!

Author: Rajesh
9 January 2024, 2:59 pm

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். பின்னர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அடுத்த மறுநாள் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செய்து அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள்.

தொடர்ந்து விஜயகாந்த் செய்த பல்வேறு நற்பணிகள், ஏழை எளிய மக்களுக்கு உதவிகள், திரைதுரைசேர்ந்த பலருக்கு வாழ்வளித்தது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. சூர்யா , சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அருண் விஜய் என பல பிரபலங்கள் அவரின் நினைவிடத்தில் வந்து தொடர்ந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

அந்தவகையில் தற்போது விஜயகாந்த் மரணத்தின் போது வெளிநாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்ததால் வரவில்லை. இந்நிலையில் அங்கிருந்து திரும்பி வந்ததும் நடிகர் விஷால் தனது நண்பர் ஆர்யாவுடன் சேர்ந்து விஜயகாந்தின் நினைவிடத்தில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அப்போது, பத்திரிக்கையாளர், மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு ஏன் நடிகர் சங்கம் முறையாக அஞ்சலி செலுத்தவில்லை? என கேட்டதற்கு, என்னால் இங்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. என்ன செய்வது என்று கூட தெரியாமல் இருந்தேன். “என்ன மன்னிச்சுடு சாமி” என்ற வார்த்தையை தவிர வேறு என்ன நான் கேட்பது’ என பதிலளித்தார். இந்த பதில் விஜயகாந்தின் ரசிகர்களுக்கு கோபத்தை தூண்டியுள்ளது. கோடி கணக்கில் பணம் வைத்திருக்கும் உங்களால் உடனடியாக ஒரு ரிட்டன் டிக்கெட் எடுத்து அந்த மாமனிதருக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லையா? இதெல்லாம் உலக மகா நடிப்பு என அவரை மோசமாக விமர்சித்துள்ளனர்.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 294

    0

    0