கருப்பு வைரம் விஜயகாந்த் சினிமா முதல் அரசியல் வரை…. இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்!

நடிகரும் , தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி வீட்டிலேயே முடங்கினார். நேற்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை தெரிவித்தது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்படுவதாக தெரிவித்தது.

இதனிடையே, விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், 9 மணிக்கு மருத்துவ அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கேப்டன்‌ விஜயகாந்த்‌ அவர்கள்‌ நுரையீரல்‌ அழற்சி காரணமாக மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர்‌ ஆதரவுடன்‌ சிகிச்சை பெற்றிருந்தார்‌. மருத்துவ பணியாளர்களின்‌ கடின முயற்சி இருந்தபோதிலும்‌ அவர்‌ இன்று காலை 28 டிசம்பர்‌ 2023 காலமானார்‌.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் விஜயகாந்த்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்குகட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பிறகு, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. சுமார் 3 மணிநேரம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தேமுதிக அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விஜயகாந்த் உடல் தீவுத் திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதில் கடும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியால் விஜயகாந்த் உடல் தீவுத் திடலுக்கு மக்கள் அஞ்சலிக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், நாளை அதிகாலை 4 மணிக்கு தீவுத் திடலுக்கு விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்டு சென்னை தீவுத் திடலில் இருந்து நாளை பிற்பகல் 1 மணிக்கு மீண்டும் விஜயகாந்த் உடல் கோயம்பேடு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்படும் என தகவல்கள் கூறுகிறது.

விஜயகாந்தின் மறைவை ஒட்டி அவர் செய்த உதவிகள் , வயிறார சாப்பாடு போட்டு ஏழை மக்களின் பசியாற்றியது, திறமைமிக்க கலைஞர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியது என அவரின் அத்தனை நற்செயல்களையும் நினைவு கூர்ந்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது இதுவரை பார்த்திராத அவரின் பழைய புகைப்படங்கள் சில சமூகவலைத்தளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

19 minutes ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

26 minutes ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

1 hour ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

1 hour ago

செந்தில் பாலாஜி SAFE… அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் உச்சநீதிமன்றம் உத்தரவு!

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…

2 hours ago

ஒரே ஒரு கேள்வி இப்படி பேச வைச்சிடுச்சே! ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஒரு நிலைமையா வரணும்?

ஸ்ருதிஹாசனின் பிரேக்கப்  கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார்.  இருவரும் லிவ்…

2 hours ago

This website uses cookies.