கண்ணுபட போகுதய்யா..! விஜயகாந்தை பார்க்க வந்த தொண்டர்களுக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த கேப்டன் மகன்..!
Author: Vignesh4 January 2023, 8:30 pm
ஒருவர் குறுகிய காலத்தில் அரசியலில் உச்சம் அடைந்ததும், உச்சம் அடைந்த உடனேயே அதளபாதளத்திற்கு சென்றதும் விஜய்காந்த்தும், அவரது தேமுதிக கட்சியும்தான். திரைத்துறையில் புகழின் உச்சியில் இருந்த விஜய்காந்த், அரசியலில் களம் காண ஆயிரம் காரணம் கூறப்பட்டாலும், உண்மையில் அவரது சொத்தை சேதப்படுத்தியதுதான், அவரை அரசியலில் பிரவேசிக்க வைத்தது.
திமுக ஆட்சியில் இருக்கும் போது சாலை விரிவாக்கம் மற்றும் பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றது. இதற்காக, சென்னை கோயம்பேடில் விஜய்காந்திற்கு சொந்தமான திருமண மண்டபத்தின் ஒரு பகுதியை இடித்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், இதற்கு விஜய்காந்த் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதனை இடிக்காமல் கட்டுவதற்கான ஐடியாவும் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், திமுக அரசு அதனை இடித்தது. இதனால், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற விஜய்காந்த், அரசியல் கட்சிக்கு அரசியல் கட்சியால்தான் பதிலடி கொடுக்க முடியும் என்று எண்ணி, தேமுதிக என்ற கட்சியை உருவாக்கினார்.
அவர் நினைத்ததைப் போலவே, திமுக தலைவர் கருணாநிதியை மிக மூர்க்கத்தனமாக எதிர்த்ததால், எதிர்பார்த்ததை விட தேமுதிக வளர்ந்தது. கூடவே, மிகவும் குறுகிய காலத்தில் தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவர் எந்த அந்தஸ்த்தும் அவருக்கு கிடைத்தது. மேலும், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவையும் நேரடியாக எதிர்த்து தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார். ஆனால், அடுத்த சில காலத்திலேயே அவரது உடல் நலனும், தொடர்ந்து அவரது கட்சியும் சரிவை சந்தித்தது.
சினிமாவில் சாதித்தது போது அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு உதவ முயற்சி செய்தார், அதற்கான வேலைகளில் முழுமையாக ஈடுபட்டார். ஆனால் உடல்நலக் குறைவு காரணமாக அவர் அப்படியே வீட்டில் முடங்கினார்.
சில தினங்களுக்கு முன் புதுவருடத்தில் ஸ்பெஷலாக வீட்டைவிட்டு வெளியே வந்து தனது தொண்டர்களை சந்தித்தார். அப்படி தனது அப்பாவை சந்திக்க வந்த தொண்டர்களுக்கு விஜய பிரபாகரன் அனைவருக்கும் 100 ரூபாய் கொடுத்து அனுப்பியுள்ளார்.