திக்குமுக்காடி நின்ற கஸ்தூரிராஜாவுக்கு ஓடிப்போய் உதவி செய்த கேப்டன்.. வைரலாகும் தனுஷ் அக்காவின் பதிவு..!
Author: Vignesh29 December 2023, 11:30 am
கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், அவரது உடலுக்கு பிரபலங்கள், ரசிகர்கள், மக்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய உள்துறை அமைச்சர் உள்பட பல பாஜக தலைவர்கள் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நேரில் வரமுடியாத பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை சமூக வலைதளம் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தனுஷின் தந்தையும் பிரபல இயக்குனருமான கஸ்தூரிராஜா சினிமாவுக்கு வந்த சமயத்தில் அவருக்கு பெரிதும் வசதி வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தாராம். அப்போது, அவருடைய மகள் கார்த்திகா தேவிக்கு மருத்துவராக வேண்டுமென்ற கனவு இருந்துள்ளது. சில மதிப்பெண்கள் குறைவாக எடுத்த காரணத்தினால் கார்த்திகா தேவியால் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க முடியாமல் போய்விட்டது.
கஸ்தூரிராஜாவிற்கு வசதி இல்லாததால் தனியார் கல்லூரியில் தனது மகளை படிக்க வைக்க முடியவில்லை. இப்படி ஒரு சமயத்தில் நடிகர் விஜயகாந்த் எதிர்ச்சியாக கஸ்தூரிராஜாவை சந்தித்துள்ளார். அப்போது, கார்த்திகா தேவி அழுது கொண்டிருப்பதை பார்த்த விஜயகாந்த் கஸ்தூரிராஜாவிடம் என்ன பிரச்சனை என்று கேட்க மருத்துவக் கல்லூரியில் சேர முடிய வில்லை என கூற உடனடியாக கார்த்திகா தேவிக்கு ராமச்சந்திரா மருத்துவமனையில் படிக்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
விஜயகாந்த் பலருக்கு பல நன்மைகளை செய்துள்ளார் என்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், இதுவும் ஒன்றாகும் விஜயகாந்த் தனக்கு உதவி செய்தது குறித்து தனுஷின் அக்கா கார்த்திகா தேவி இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே மனம் உருகி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.