ஃபேன் Boy சம்பவம்… அச்சு அசல் விஜயகாந்த் போல் மாறிய ரசிகர்..! வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
2 January 2024, 4:52 pm

மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் சிறப்பான முறையில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பல ஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல், கரகோஷங்களுடன் அவரது உடல் வீதியெங்கும் வரலாறு பேசும் சம்பவமாக இருந்தது.

லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சென்னை தேமுதிக அலுவலகத்தில் 50 கிலோ எடை கொண்ட சந்தன பேழைக்குள் விதைக்கப்பட்டார் விஜயகாந்த். இவரின் மறைவால் தமிழகமே துக்கத்தில் உறைந்தது.

ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளை போலவே மேக்கப் போட்டுகொண்டு அவ்வப்போது வீடியோ வெளியிடுவார்கள். அந்த வகையில் தற்போது மேக்கப் மூலம் அச்சு அசல் அப்படியே விஜயகாந்த் போலவே நபர் ஒருவர் மாறியுள்ளார்.

இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். மேலும் இந்த வீடியோ தற்போது படுவைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 295

    0

    0