உறவினர்கள் எதிர்ப்பு.. ரசிகையாக இருந்து கேப்டனை கரம்பிடித்த பிரேமலதா.. கலைஞர் நடத்தி வைத்த திருமணம்..! (வீடியோ)
Author: Vignesh30 December 2023, 5:42 pm
நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் மறைவு பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. பல சாதனைகளை படைத்த விஜயகாந்த் என்றும், நம் நினைவில் இருந்து நீங்க மாட்டார். இந்நிலையில், விஜயகாந்தின் மறைவுக்கு பின்னர் அவருடைய விஷயங்கள் குறித்து ஒவ்வொரு தகவலும் தற்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது, அவரது திருமண வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளிவந்துள்ளது.
முன்னதாக பிரேமலாதாவுக்கும் விஜயகாந்த்க்கும், 31 1990 அன்று திருமணம் நடந்தது. இவர்களுக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட போது திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பதற்கு எங்களின் திருமணமே சான்று என்று தெரிவித்திருந்தார். மேலும், கேப்டன் விஜயகாந்தின் குடும்பம் மதுரை நாங்கள் வேலூரை சேர்ந்தவர்கள். எங்கள் குடும்பங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. என்னை பார்க்க வந்த உடனே அப்பாவுக்கு பிடித்து விட்டது.
மகளை தருவதாக இருந்தால் அது தான் அவருக்காக தான் இருக்க வேண்டும் என்று அப்பா நினைத்தார். அப்போது, என்னை சந்திக்க வரும்போது அவர் மிகவும் எளிமையானவராக வந்தார். அவர் ஒரு நட்சத்திரம் போல் இல்லை. செருப்பு இல்லாமல் காவி துணியை அணிந்து கொண்டு வந்தார். சபரிமலைக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அந்த வேடத்தில் வந்திருந்தார். நட்சத்திரங்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் அல்லது என்னவாக இருக்கும் என்று பெற்றோருக்கு தெரியாது. அதனால், ஒரு சில எதிர்ப்புகளும் அந்த சமயத்தில் ஏற்பட்டது.
பின்னர், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விஜயகாந்த் ஜொலிக்க தொடங்கினார். 1952 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த இவர் எந்தவித தொடர்பும், இல்லாமல் சினிமாவில் நுழைந்தார். 1979இல் இனிக்கு இமை என்ற படத்தின் மூலமாகத்தான் அறிமுகமானார். தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி கான்செப்ட்களையும் மாற்றி எழுதிய விஜயகாந்துக்கு ஈடு இணை இல்லாமல் நட்சத்திரமாகவே வளர்ந்து கொண்டிருந்தார்.
திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையும், பலரின் வாழ்க்கையும் விஜயகாந்த் மாற்றியவர் என்று பெருமிதத்துடன் பிரேமலதா தெரிவித்து இருந்தார். இவர்களது திருமணத்தை கலைஞர் கருணாநிதி கையால் தான் தாலி எடுத்து கொடுக்கப்பட்டு, விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவிற்கு திருமணம் நடந்தது. இதுவரை ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த வீடியோ விஜயகாந்த் மறைவிற்குப் பின்னர் தற்போது வைரலாகி வருகிறது.
இல்வாழ்வை துவக்கி வைத்த கலைஞர்
— SHAAN SUNDAR 🖤♥️🖤♥️ (@Sun46982817Shan) December 29, 2023
இறுதிவரை இருவருக்கும் இருந்த அன்பு ஊர் அறிந்த ஒன்று♥️♥️♥️♥️♥️♥️ pic.twitter.com/o2Zldmq4Rp