மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நேற்று சிறப்பான முறையில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய்யப்பட்டது. பல ஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல், கரகோஷங்களுடன் அவரது உடல் வீதியெங்கும் வரலாறு பேசும் சம்பவமாக இருந்தது.
லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சென்னை தேமுதிக அலுவலகத்தில் 50 கிலோ எடை கொண்ட சந்தன பேழைக்குள் விதைக்கப்பட்டார் விஜயகாந்த். இவரின் மறைவால் தமிழகமே துக்கத்தில் உறைந்தது.
இந்நிலையில், பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்த விஜயகாந்த் ரஜினிஉடன் சேர்ந்து மட்டும் நடிக்கவில்லை. ஆனால், இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருந்தது. அதாவது, ரஜினி நடிப்பில் 1980 ஆம் ஆண்டு வெளியான முரட்டுக்காளை மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் ரஜினியின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது.
முரட்டுக்காளை படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க முதலில் விஜயகாந்த் தான் கமிட் ஆகி இருந்தார். ஆனால், சில தனிப்பட்ட காரணத்தால் இந்த படத்தில் இருந்து விஜயகாந்த் விலகி விட்டாராம். இந்த படம் மட்டும் வந்திருந்தால் நிச்சயமாக இது முரட்டு காம்போவா இருக்கும் என ரசிகர்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
வெறித்தனமான டிரைலர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
கோவை தடாகம் சாலையில் உள்ள அவிலா கான்வெண்ட் என்ற தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை சரி…
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக இன்று வரை பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகள் நீடித்து வருகின்றன. 2019ஆம்…
இயக்குனர் டூ காமெடி நடிகர் அஜித்தின் “ரெட்”, சூர்யாவின் “மாயாவி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. எனினும் இத்திரைப்படங்களை தொடர்ந்து…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலில் இன்று…
This website uses cookies.