மதுரை மாவட்டம் விருதுநகரில் 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ந் தேதி பிறந்தவர் தான் விஜயகாந்த். இவரது நிஜப்பெயர் விஜயராஜ் சினிமாவிற்காக விஜயகாந்த்தாக மாறினார். தமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்புலமும், சிபாரிசும் இல்லாமல் தங்களது கடின உழைப்பின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் விஜயகாந்த். பின்னர், தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் தனி இடத்தையும் தமிழ் திரையுலகில் பெற்றார்.
சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னர் ரைஸ் மில் நடத்திக்கொண்டிருந்த விஜயராஜ், சினிமாவிற்காக விஜயகாந்தாக மாறினார். திறமையான நடிகராக கோலிவுட்டில் கேப்டனாக வலம் வந்த விஜயகாந்த் மிகச்சிறந்த மனிதர் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம் தான். நடிகர் – நடிகைகளுக்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முன்வந்து உதவி செய்து நேரம் பாராமல் திரைத்துறைக்காக பணியாற்றியவர். யார் மனதையும் நோகடிக்காது, அனைவர்க்கும் நியாயமாக சமமாக நடந்து கொள்வதில் மிகுந்த கவனமாக இருப்பவர் விஜயகாந்த்.
பெரிய நடிகர், சீனியர் நடிகர் என்ற வித்தியாசம் பாராமல் அனைவரது நிறை குறைகளை அனுசரித்து வேண்டியதை செய்து கொடுத்து வந்தவர். இவரால் பலன் பெற்றவர்கள், பிரபலம் அடைந்தவர்கள் ஏராளம். உடல்நலம் சரியில்லாமல் திரையுலகு மற்றும் அரசியல் பொதுப்பணிகளிலும் பெரிதும் ஈடுபடாமல் இருந்து வந்த விஜய்காந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தால் ரசிகர்கள், தொடர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் தங்களது ஆழ்த்த இரங்கலை தெரிவித்து கோடானகோடி மக்கள் மத்தியில் கேப்டன் உடல் ஊர்வலமாக கொண்டுச்சென்று அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் விஜயகாந்த் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது, நடிகை ஊர்வசி சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயகாந்த் குறித்து பேசியுள்ளார். “குழந்தை நட்சத்திரமாக நான் இருந்தபோதே விஜய்காந்துடன் நல்ல பழக்கத்தில் இருந்தேன். அவர் எப்போதும் என்னை தங்கச்சி என்று தான் அழைப்பார். சில படங்களில் அவருடன் ஜோடியாக நடிக்கும்போது ரொமான்டிக் காட்சிகள் என்றால் அப்படி இப்படி பேசி மழுப்பிடுவார்.
அதுமட்டுமின்றி ஊர்வசி பயங்கர வெள்ளையாக இருக்கிறார். அவருடன் நான் ஜோடியாக நடிக்கும்போது எப்படி இருக்கிறேன் என்று கிண்டலாகவே கேட்பார். சினிமா தொழிலில் நான் பார்த்த மிகச்சிறந்த மனிதர் என்றால் அது விஜயகாந்த் தான் அவருடன் நடிக்கும்போது பாதுகாப்பாக உணர்வேன். நடிகர் சங்கத்தை சிறப்பான முறையில் கொண்டுசென்றார். அனைவரையும் ஒரே மாதிரி நடத்தும் அவரின் அந்த குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என ஊர்வசி கூறினார்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.