பரதேசி நீ துருபிடித்த இரும்பா.. காரி துப்ப மாட்டாங்களா? வடிவேலுவை வெளுத்து வாங்கிய பிரபலம்..!

Author: Vignesh
3 January 2024, 5:51 pm

பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் டிசம்பர் 28ஆம் தேதி மரணமடைந்த செய்தி இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவரது மறைவிற்கு இரங்கல் அனைவரும் இரங்கல் தெரிவித்தோம். நேரில் அஞ்சலி செலுத்தியும் பலர் வந்தனர்.

vijayakanth

விஜயகாந்த் மறைவிற்கு இரு முக்கிய நடிகர்களான விஜய் மற்றும் வடிவேலுவின் வரவேற்பை ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். விஜய் மட்டும் அன்று இரவு தன்னை உருவாக்கிய விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தி சென்றார். ஆனால், வடிவேலு விஜயகாந்த் இறப்பை ஒரு பொருட்டாகவே கண்டு கொள்ளவில்லை.

vijayakanth-updatenews360

இவர் வராததற்கு பல்வேறு காரணங்கள் தெரிவித்து வந்தாலும் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் வடிவேலுவை கண்டபடி திட்டி வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், இந்த வடிவேலு பரதேசி விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வராதது கண்டனத்திற்கு உரியது என்றும், வடிவேலுக்கு மரியாதை இன்னும் குறையும். நீ வரவில்லை என்றாலும் பரவாயில்லை ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கலாம்.

vijayakanth-updatenews360

என் முன்னேற்றத்திற்கு கமல், மதுரைக்காரர் விஜயகாந்த் என்று சொன்னியே, இனிமேல் வடிவேலு படம் வந்தால் தமிழக மக்கள் பார்ப்பார்களா பணமும், சொத்தும் நகையும் உன்னை காப்பாத்தாது. பெயர் தான் காப்பாத்தும். 84 வயதான கவுண்டமணி வந்து அழுதார். அந்த வயதில் அவர் அங்கே சென்றார் அவரை விடவா நீ உயர்ந்து விட்டாய், சாவு நாடகமாடியவன். நீ ராஜ்கிரன் தயவால் நடிகர் ஆனாய் ராஜ்கிரனுக்கே நீ துரோகம். 5 லட்சம் வாங்குவது மட்டும் இல்லாமல் அவருக்கு மன உளைச்சலையும் கொடுத்து விட்டாய்.

vijayakanth-updatenews360

மனமே இல்லாதவன் உனக்கு மனிதாபிமானம் இல்லை. விவேக்குடன் ஒன்றாய் நடித்தாய் அவர் இறப்புக்கும் வரவில்லை, மனோபாலா உன் மீது அன்பு வைத்திருந்தார் அவர் சாவுக்கும் வரவில்லை, போண்டாமணி நெஞ்சில் ஏறி மிதித்து இருக்கிறாய் அவன் சாவுக்கு நீ வரவில்லை என்று கண்டபடி பயில்வான் பேசி இருக்கிறார். நீ வெளியில் போனால் கேப்டன் இறப்புக்கு வரவில்லை என்று மக்கள் காரி துப்பமாட்டார்களா என்று பயில்வான் ரங்கநாதன் வடிவேலுவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 487

    0

    0