கேப்டனின் மறைவு.. எமோஷ்னலாக இளைய மகன் ஷண்முக பாண்டியன் போட்ட முதல் பதிவு..!

Author: Vignesh
30 December 2023, 6:43 pm

மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நேற்று சிறப்பான முறையில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பல ஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல், கரகோஷங்களுடன் அவரது உடல் வீதியெங்கும் வரலாறு பேசும் சம்பவமாக இருந்தது.

லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சென்னை தேமுதிக அலுவலகத்தில் 50 கிலோ எடை கொண்ட சந்தன பேழைக்குள் விதைக்கப்பட்டார் விஜயகாந்த். இவரின் மறைவால் தமிழகமே துக்கத்தில் உறைந்தது.

vijayakanth-updatenews360

இந்நிலையில், விஜயகாந்தின் மரண துக்கத்திலிருந்து அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் இன்னும் மீளவில்லை. தற்போது, விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் instagram பக்கத்தில் உருக்கமான ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். உங்களின் இதயபூர்வமான இரங்களுக்கு எங்களின் நன்றிகள். நீங்கள் கொடுத்த ஆதரவு அனைத்துமே, என்னுடைய அப்பா எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார் என்பதை காட்டுகிறது. இந்த கடுமையான நேரத்தில் எங்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கொடுத்துள்ளது என்று சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 582

    0

    0