சின்ன வயசுல இருந்தே அப்பா அத சொல்லிட்டே இருப்பாரு.. எமோஷனல் ஆன விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்..!

Author: Vignesh
2 January 2024, 2:53 pm

மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் சிறப்பான முறையில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பல ஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல், கரகோஷங்களுடன் அவரது உடல் வீதியெங்கும் வரலாறு பேசும் சம்பவமாக இருந்தது.

லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சென்னை தேமுதிக அலுவலகத்தில் 50 கிலோ எடை கொண்ட சந்தன பேழைக்குள் விதைக்கப்பட்டார் விஜயகாந்த். இவரின் மறைவால் தமிழகமே துக்கத்தில் உறைந்தது.

vijayakanth-updatenews360

இந்நிலையில், விஜயகாந்தின் மரண துக்கத்திலிருந்து அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் இன்னும் மீளவில்லை. தற்போது, விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் instagram பக்கத்தில் உருக்கமான ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். உங்களின் இதயபூர்வமான இரங்களுக்கு எங்களின் நன்றிகள். நீங்கள் கொடுத்த ஆதரவு அனைத்துமே, என்னுடைய அப்பா எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார் என்பதை காட்டுகிறது. இந்த கடுமையான நேரத்தில் எங்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கொடுத்துள்ளது என்று சண்முக பாண்டியன் தெரிவித்து இருந்தார்.

vijayakanth-updatenews360

முன்னதாக, விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில், எங்கள் வீட்டில் வார இறுதியில் ஸ்பெஷலாக பிரியாணி செய்வோம். அப்போது, சாலையில் செல்பவர்களுக்கு நானும் எனது அண்ணனும் தான் எங்களுடைய கையால் உணவளிப்போம். காலையில் எழுந்த உடனே என்னுடைய அப்பா இல்லாதவர்களுக்கு உணவு கொடுங்கள் என்று சொல்லுவார். மற்ற உதவி செய்வதை சின்ன வயதிலிருந்து சொல்லிக் கொடுத்துதான் எங்களை வளர்த்துள்ளார் என்று பெருமிதத்துடன் சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார்.

vijayakanth-updatenews360

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 377

    0

    0