விஜயகாந்த் மகன் இத்தனை படங்களில் நடித்துள்ளாரா?.. போராடி தூக்கி விட நினைத்த கேப்டன்..!
Author: Vignesh25 January 2024, 10:50 am
மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் சிறப்பான முறையில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பல ஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல், கரகோஷங்களுடன் அவரது உடல் வீதியெங்கும் வரலாறு பேசும் சம்பவமாக இருந்தது.
லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சென்னை தேமுதிக அலுவலகத்தில் 50 கிலோ எடை கொண்ட சந்தன பேழைக்குள் விதைக்கப்பட்டார் விஜயகாந்த். இவரின் மறைவால் தமிழகமே துக்கத்தில் உறைந்தது.
இந்நிலையில், விஜயகாந்தின் மரண துக்கத்திலிருந்து அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் இன்னும் மீளவில்லை. முன்னதாக, விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில், எங்கள் வீட்டில் வார இறுதியில் ஸ்பெஷலாக பிரியாணி செய்வோம். அப்போது, சாலையில் செல்பவர்களுக்கு நானும் எனது அண்ணனும் தான் எங்களுடைய கையால் உணவளிப்போம். காலையில் எழுந்த உடனே என்னுடைய அப்பா இல்லாதவர்களுக்கு உணவு கொடுங்கள் என்று சொல்லுவார். மற்ற உதவி செய்வதை சின்ன வயதிலிருந்து சொல்லிக் கொடுத்துதான் எங்களை வளர்த்துள்ளார் என்று பெருமிதத்துடன் சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சினிமா துறையில் உச்சத்தில் இருந்தபோது இளம் நடிகர் பலருக்கு உதவிகள் செய்துள்ளார் விஜயகாந்த். ஆனால், அவரது மகனின் சினிமா வாழ்க்கை வெற்றிகரமாக அமையவில்லை என்பது உண்மைதான். 2015 ஆம் ஆண்டு சுரேந்தீரன் இயக்கத்தில் சகாப்தம் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இந்த படத்தில் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். ஆனால், படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
அடுத்து, தமிழன் என்று சொல் தமிழர்களின் வரலாற்றை சித்தரிக்கும் வகையில் உதவாக்கிய கதையம்சம் கொண்ட இந்த படத்தில் விஜயகாந்த் தனது மகனுடன் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அந்தப் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மதுரவீரன் இந்த படத்திலும் ஷண்முக பாண்டியன் நடிக்க கமிட்டானார். ஆனால், அந்த படம் வந்த சுவடு தெரியாமல் போனது. அடுத்து படைத்தவன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை அன்பு தான் இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகிய வரவேற்பை பெற்றது. இந்த படம் சண்முக பாண்டியனுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.