அஜித் முகத்தில் பணத்தை வீசிய விஜயகாந்த்.. பின்னர் அதை பார்த்ததும் கண்கலங்கிய கேப்டன்..!

Author: Rajesh
18 June 2023, 7:30 pm

தமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்புலமும், சிபாரிசும் இல்லாமல் தங்களது கடின உழைப்பின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் விஜயகாந்த் மற்றும் நடிகர் அஜித். பின்னர், தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் தனி இடத்தையும் தமிழ் திரையுலகில் பெற்றவர்கள். ரைஸ் மில் நடத்திக்கொண்டிருந்த விஜயராஜ், சினிமாவிற்காக விஜயகாந்தாக மாறினார்.

Vijayakanth - Updatenews360

பல திரைப்படங்களில் சாக்லேட் பாயாக நடித்த அஜித், பில்லா படத்திற்கு பின் பக்கா ஆக்‌ஷன் ஹீரோவாக மாறினார். அதன்பின் மங்காத்தா படத்தின் வெற்றி அஜித்தின் மார்க்கெட் மதிப்பை அதிகரித்தது. இந்நிலையில், தற்போது, அஜித் மற்றும் விஜயகாந்த் இடையே நடந்த ஒரு சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.

விஜயகாந்த் தலைவராக இருந்த சமயத்தில் ஒரு முறை நடைபெற்ற நடிகர் சங்க கலைநிகழ்ச்சிக்கு ஒட்டுமொத்த நடிகர், நடிகைகளும் பங்கேற்கவேண்டும் என விஜயகாந்த் கட்டளையிட்டிருந்தாராம். அஜித் தவிர எல்லோரும் அதில் கலந்துக்கொண்டனராம். அந்த நிகழ்ச்சி முடிந்த பின், விஜயகாந்த்தை சந்தித்து அஜித் ஒரு தொகையை தன் பங்காக கொடுத்தாராம்.

அதை வீசி எறிந்த விஜயகாந்த், “நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா?” என திட்டியுள்ளார். அப்போது அஜித் சட்டையை கழட்டி தனது முதுகில் பெரிய விபத்து ஏற்பட்டிருப்பதை காட்டி நான் இந்த வழியிலும் நடித்து வருகிறேன் காரணம் தயாரிப்பாளர் நஷ்டம் அடையகூடாது என சொன்னவுடன், விஜயகாந்த் அவர்கள் கண்கலங்கி அழுது காசே வேண்டாம்பா நீ எடுத்திட்டு போ என சொல்லி அனுப்பியதாக பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!