கேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!

Author: Selvan
28 December 2024, 3:04 pm

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

தமிழ் சினிமாவில் கருப்பு வைரம் என மக்களால் கொண்டாடப்பட்ட கேப்டன் விஜயகாந்த் இறந்து இன்றோடு ஒரு வருடம் முடிவடைந்துள்ளது.

Social media tributes to Vijayakanth

இதனால் ஒட்டுமொத்த திரையுலக பிரபலங்கள்,அரசியல்வாதிகள்,தேமுதிக தொண்டர்கள்,பொதுமக்கள் அனைவரும்,அவருடைய நினைவு இடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தேமுதிக கட்சி சார்பில் ஏற்பாடு செய்த குருபூஜைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அதிலும் குறிப்பாக நடிகர் விஜயை அவரது இல்லத்தில் சந்தித்து,அழைப்பு விடுத்தார் விஜயகாந்த் மகனான பிரபாகரன்.

இதையும் படியுங்க: சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த அட்லீ…வசூலில் திணறும் பேபி ஜான்…!

மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய X-தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதில் “என் அன்பிற்குரிய கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவருக்கு என் நினைவஞ்சலி”என குறிப்பிட்டிருந்தார்.

உலக நாயகன் கமல்ஹாசனும் அவருடைய X-பக்கத்தில் “அன்பு நண்பர் கேப்டன் விஜயகாந்த் மறைந்து ஓராண்டு ஆகிறது,அவரது இழப்பை மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள்,அந்த அளவிற்கு மக்களுக்காக தன்னை அர்பணித்திருக்கிறார்” என பதிவிட்டிருந்தார்.

மேலும்,பொதுமக்கள் பலர் சமூகவலைத்தளங்களில் அவருடைய சாதனைகள் மற்றும் கடந்து வந்த பாதைகளை குறிப்பிட்டு,மாமனித கேப்டன் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 70

    0

    0

    Leave a Reply