நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலம்.. சிங்கமாக சீறிய கேப்டன்..! (வீடியோ)

கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், நேற்று முன்தினம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் விஜயகாந்த்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கொண்டு செல்லப்பட்டு தொண்டர்கள் மற்றும் மக்களின் அஞ்சலிக்காக நேற்று மதியம் அவரது உடல் வைக்கப்பட்டது. இரவு முழுவதும் விடிய விடிய விஜயகாந்தின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என சாரைசாரையாக படையெடுத்து வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனால், அங்கு கூட்ட நெரிசல் அலைமோதியது. எனவே, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக இன்று அதிகாலை தீவுத்திடலில் விஜயகாந்தின் இன்று கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே, விஜயகாந்த்தின் உடல் இன்று மாலை 4.45 மணியளவில் தேமுதிக கட்சி அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக, பிற்பகல் 1 மணிக்கு தீவுத்திடலில் இருந்து அவரது இறுதி ஊர்வலம் தொடங்கி கோயம்பேடு வந்தடைய இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் விஜயகாந்த் அவர்கள் மறைந்த சிவாஜி கணேசன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் தனி ஆளாக சிங்கமாக சீறிய வீடியோ, தற்போது இணையதளத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது. கட்டுக்கடங்காத கூட்டத்தை விஜயகாந்த் தனி ஆளாக சமாளித்துள்ளார்.

Poorni

Recent Posts

தாயே மகளுக்கு செய்த கொடூரத்தின் உச்சம்.. நீலகிரியில் அதிர்ச்சி!

நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…

20 minutes ago

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?

வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…

43 minutes ago

இருதரப்பும் பேச என்ன இருக்கு? – உச்ச நீதிமன்ற உத்தரவு.. சீமான் ரியாக்‌ஷன்!

நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…

1 hour ago

கதற..கதற..மின்னல் வேகத்தில் ‘டிராகன்’ வசூல்..!

100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…

2 hours ago

டீயில் எலி மருந்து காதலனுக்கு கொடுத்த காதலி.. என்னது அண்ணனா? விழுப்புரத்தில் பகீர்!

விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…

2 hours ago

எங்களை விட்டுப் போகாதீர்கள்.. தேனியிம் ஓபிஎஸ்சை கடுமையாக தாக்கிப் பேசிய இபிஎஸ்!

எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…

3 hours ago

This website uses cookies.