மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் சிறப்பான முறையில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பல ஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல், கரகோஷங்களுடன் அவரது உடல் வீதியெங்கும் வரலாறு பேசும் சம்பவமாக இருந்தது.
லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சென்னை தேமுதிக அலுவலகத்தில் 50 கிலோ எடை கொண்ட சந்தன பேழைக்குள் விதைக்கப்பட்டார் விஜயகாந்த். இவரின் மறைவால் தமிழகமே துக்கத்தில் உறைந்தது.
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில், எங்கள் வீட்டில் வார இறுதியில் ஸ்பெஷலாக பிரியாணி செய்வோம். அப்போது, சாலையில் செல்பவர்களுக்கு நானும் எனது அண்ணனும் தான் எங்களுடைய கையால் உணவளிப்போம். காலையில் எழுந்த உடனே என்னுடைய அப்பா இல்லாதவர்களுக்கு உணவு கொடுங்கள் என்று சொல்லுவார். மற்ற உதவி செய்வதை சின்ன வயதிலிருந்து சொல்லிக் கொடுத்துதான் எங்களை வளர்த்துள்ளார் என்று பெருமிதத்துடன் சண்முக பாண்டியன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் இளைய மகன் சண்முக பாண்டியன் நீண்ட முடி மற்றும் தாடியை வைத்திருந்தார். தற்போது, அவர் படைத்தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்காகவும், அடுத்து அவர் நடிக்க இருக்கும் குற்றப்பரம்பரை வெப் சீரிஸ்காகவும் தான் இப்படி முடியை வளர்த்து வருகிறாராம்.
சசிகுமார் இயக்கும் குற்ற பரம்பரை வெப் சீரிஸ் பற்றி கேட்டதுமே விஜயகாந்த் தனது மகன் அதில் நடிக்க வேண்டும் என கூறினாராம். ஆனால், அதற்கான சூட்டிங் துவங்குவதற்கு முன்பே அவர் காலமாகிவிட்டார். இப்படி மகனின் நடிப்பை பார்க்காமல் பாதியிலேயே சென்றுவிட்டார் என்று தொண்டர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.