பிக்பாஸ்7 சீசனில் முதல் போட்டியாளர் மீண்டும் விஜயகுமார் மகளா? துள்ளி குதிக்கும் 90’ஸ் கிட்ஸ்..!

Author: Vignesh
7 September 2023, 12:30 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்க உள்ளனர். அதற்கான வேளைகளில் பிக்பாஸ் குழு மும்முரமாக இறங்கியுள்ளது. இந்த முறை யார் யாரெல்லாம் பங்கேற்க உள்ளார்கள் என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம். கடைசியாக முகமது அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்த சீசனுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனும் மற்ற சீசன்களை போலவே சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் இருக்கவேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்களாம். அதன் படி இந்த சீசனில் கலந்துக்கொள்ளப்போகும் முதல் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

vijaykumar- updatenews360

இந்தநிலையில், முதல் போட்டியாளராக நடிகர் விஜய் குமாரின் மகள்களில் ஒருவர் பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் யாரென்றால் நடிகை ஸ்ரீதேவி தானம். இப்படி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி நடிகையின் தரப்பிலிருந்து எந்த ஒரு மறுப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கனா காணும் காலங்கள் புகழ் யுதன் பாலாஜி பெயரும் தற்போது பிக் பாஸ் 7 சீசன் போட்டியாளர்கள் லிஸ்ட் வந்துள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!