இதெல்லாம் ரொம்ப ஓவர்.. வனிதாவுக்கு இப்படி பண்ணி இருக்க கூடாது..!

Author: Vignesh
22 February 2024, 5:51 pm

விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சினிமாவில் ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமான கருத்துகளை வெளிப்படுத்தினார். தற்போது திரைப்படங்களில், டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

vanitha

வனிதா தனது19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்த அவர், 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். வனிதாவிற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில் இயக்குநர் பீட்டர் பாலை கடந்த 2020ஆம் ஆண்டு 3வதாக திருமணம் செய்தார்.

பால் போதைக்கும், குடிக்கும் அடிமையாகி இருந்ததாக கூறி அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதனிடையே அதிகமாக குடித்ததால் பீட்டருக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி சில மாதங்களுக்கு முன் தான் மரணமடைந்தார். இதனிடையே வனிதா அப்பா விஜயகுமாருடன் சொத்து தகராறு செய்து அவரை நடுரோட்டில் இழுத்து அடித்து குடும்ப மானத்தையே வாங்கிவிட்டார். அன்றிலிருந்து அந்த குடும்பத்தில் இருந்தே வனிதாவை பிரித்துவிட்டார்கள். இதனால் பல வருடங்களாக தனது மகள்களுடன் தனித்து வாழ்ந்து வருகிறார் வனிதா.

vijayakumar

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அருண் விஜய் வீட்டு திருமண வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆம் அருண் விஜய்யின் அக்கா அனிதா விஜயகுமாரின் மகள் தியாவின் திருமண கொண்டாட்ட வீடியோக்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. மெஹந்தி விழா நடைபெற்ற நிலையில் அதில் ஸ்ரீதேவி, விஜயகுமார், அனிதா விஜயகுமார் , அருண் விஜய் உள்ளிட்டோர் நடனமாடிய வீடியோக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இப்படியாக ஒட்டுமொத்த குடும்பமும் அங்கு மகிழ்ச்சியில் இருக்க வனிதாவை அழைக்க கூட இல்லை என்று கூறப்படுகிறது. எல்லோரும் ஒன்றாக இருக்க வனிதா மட்டும் தனித்து விடப்பட்ட நிலையில், பல பேர் வனிதாவின் நிலை குறித்து வருத்தப்பட்டு வருகின்றனர். மேலும், சிலர் இதெல்லாம் ரொம்ப ஓவர் கல்யாணத்துக்காவது கூப்பிட்டு இருக்கலாம் என்று வனிதா மீது பரிதாபப்பட்டு வருகின்றனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 305

    0

    0