நண்பா பழைய கேப்டனாக கர்ஜிக்க வா : விஜயகாந்த் உடல்நலம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் உருக்கமான ட்வீட்… தொலைபேசி மூலம் விசாரித்த அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
21 June 2022, 8:12 pm

சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது என அக்கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில், நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், அண்ணன் சுதீஷ் அவர்களிடம் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலையை தொலைபேசி மூலமாக விசாரித்தேன். கேப்டன் அவர்கள் ஆண்டவனின் ஆசிர்வாதத்தோடு, மக்களுடைய அன்போடு பூரணமாக நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகின்றேன்!’ என பதிவிட்டுள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!