களைகட்டிய கல்யாணம்… பேத்தியின் திருமணத்தில் நடனமாடிய நாட்டாமை – வீடியோ!

Author: Rajesh
19 February 2024, 11:54 am

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான விஜயகுமார் தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்து இவர் சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக மிகவும் கௌரமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார். முத்துக்கண்ணு என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட இவர் அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். முதல் மனைவிக்கு பிறந்தவர் நடிகர் அருண் விஜய் ஆவார், இவருக்கு கவிதா, அனிதா, வனிதா, பிரிதா, ஸ்ரீ தேவி என்ற பெண்கள் உள்ளனர்.

இந்நிலையில் விஜயகுமாரின் பேத்தியின் மகள் அனிதாவின் மகளுமான திவ்யாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகை ஸ்ரீதேவி , நடிகை ப்ரீத்தா , அனிதா விஜயகுமார், பேரன், பேத்திகள் என ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்து பிரம்மாண்டமாக குடும்ப விழாவாக கொண்டாடியுள்ளனர்.

இந்த விழாவில் நாட்டாமை விஜயகுமாரின் நடன வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி செம வைரலாகி வைரலாகியுள்ளது. பல வருடங்களுக்கு பிறகு விஜயகுமாரை இவ்வளவு மகிழ்ச்சியாக பார்க்கிறோம். நீங்கள் மீண்டும் நாட்டாமை போன்ற பெருந்தன்மையான காதபத்திரங்களில் நடிக்கவேணும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ;

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 523

    0

    0