சமந்தா வேண்டாம்; மறுத்த விஜய்; அடுத்து காஜல் அகர்வாலா? ட்வீட் ஆல் பறிபோன வாய்ப்பு,.
Author: Sudha9 July 2024, 11:25 am
தளபதி 69 விஜய்யின் கடைசி படம் என்பதாலேயே அதில் யார், யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
முக்கியமாக ஹீரோயின் யார் என்பதை தெரிந்து கொள்ளவே பலரும் துடிக்கிறார்கள். இந்த நிலையில் விஜய்க்கு ஜோடியாக சமந்தாவை தேர்வு செய்திருந்தார்கள்.
இந்நிலையில் நெபுலைஸ் செய்வது குறித்து சமந்தா ஒரு டுவீட் பதிவு செய்தார். சமந்தா பற்றி போட்ட ட்வீட்டை பார்த்தவர்கள், எம்.பி.பி. எஸ். படிக்காமல் எப்படி சிகிச்சையை பரிந்துரை செய்யலாம் என கேட்டார்கள்.
நீங்கள் சொல்வதுபடி யாராவது செய்து உயிர் போனால் நீங்கள் பொறுப்பு ஏற்பீர்களா என நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி ஜுவாலா கட்டாவும் சமந்தாவின் பெயரை குறிப்பிடாமல் ட்வீட் செய்தார்.
இப்படி சமந்தாவுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சர்ச்சையில் சிக்கிய அவர் நம் படத்தில் வேண்டாம் என நடிகர் விஜய் முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து காஜல் அகர்வால் அல்லது நயன்தாராவை நடிக்க வைக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கடைசி படத்தில் எங்கள் குயின் திரிஷாவை நடிக்க வைக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.