அம்மாவை உட்காரவைச்சி சைக்கிளில் ரவுண்ட் அடிக்கும் விஜய்… வைரல் போட்டோ இதோ!
Author: Shree30 July 2023, 5:40 pm
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பல வெற்றிகளை பார்த்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். தந்தை எஸ்ஏசியின் உதவியால் விஜய் ஆரம்பக்கட்டத்தில் சினிமாவில் நிலைத்திருக்க முடிந்தது. அவரது உதவி இருந்ததால் தான் இன்று இந்த உயரத்திற்கு வர முடிந்தது.
ஆனால், அதையெல்லாம் மறந்துவிட்டு விஜய் பெற்ற தந்தை என்று கூட பார்க்காமல் அவருடன் ஜென்ம விரோதியாக இருந்து வருவது பல மேடைகளில் வெளிப்படையாகவே தெரிந்தது. இது அவரது தந்தை எஸ்ஏசிக்கு மட்டும்மல்லாமல் ரசிகர்களையும் வருத்தமடைய செய்தது.
இது குறித்து பேட்டி ஒன்றில் எஸ்ஏசி, “நானும் விஜய்யும் பேசாமல் இருப்பது உண்மைதான். அதை நான் எப்போதுமே மறைத்ததில்லை. ஒருகட்டம்வரைதான் பிள்ளைகள் நமது பேச்சை கேட்பார்கள். பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால் அவர்களுடைய ஆட்டிட்யூட் மாறிவிடும். இது அனைவரது வீட்டிலும் நடக்கக் கூடிய ஒன்றுதான். அப்படிதான் ஓர் தந்தையாக நான் கூறும் சில விஷயங்கள் அவருக்கு பிடிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் அவ்வளவாக பேசிக் கொள்வதில்லை” என்றார்.
இதையடுத்து விஜய் தனது அம்மாவுடன் இருக்கும் போட்டோ ஒன்று சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது பெற்றோரின் 50வது திருமண நாள் விழாவை கொண்டாடும் விதமாக விஜய் அவர்களது வீட்டுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அவரது அப்பா இல்லை என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். என்னதான் அப்பாவுடன் பிரச்சனைகள் இருந்தாலும் விஜய் தன் அம்மாவுடன் எப்போதுமே பாசத்தோடு தான் இருப்பார்.
அண்மையில் கூட ஷோபா வாங்கிக்கொடுத்த பர்சை கலர் ஷர்ட் ஒன்றை விஜய் அணிந்து வந்த வீடியோக்கள் வெளியாகி அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை வெளிப்படுத்தியது. இந்நிலையில் விஜய் சிறு வயதாக இருந்தபோது தனது அம்மா சோபாவை சைக்கிளில் அமரவைத்து ரவுண்ட் அடித்த கியூட்டான போட்டோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த போட்டோவுக்கு ரசிகர்கள் ஹார்டின்ஸ் குவித்துள்ளனர்.