மறைந்த விஜயகாந்த்.. இன்று வரை கேப்டன்-ஐ கண்டுக்காத விஜய்.. இறுதி சடங்கிற்கு வருவாரா?

Author: Vignesh
28 December 2023, 10:25 am

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இப்படி ஒரு இடத்திற்கு வர முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் விஜயகாந்த் தான். செந்தூரப் பாண்டியன் படத்தில் அவருக்கு தம்பியாக நடிக்க விஜய்க்கு வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்து அழகு பார்த்தவர்.

Vijayakanth-Vijay

இதற்கு முன் SAC இயக்கிய நாளைய தீர்ப்பு படம் தோல்வியடைந்ததால், மகனின் வளர்ச்சிக்காக விஜயகாந்த்திடம் கேட்க தயங்கி இருக்கிறார். ஒருமுறை SAC விஜயகாந்தை பார்க்க சென்றபோது, அவரிடம் விஜயகாந்த் சார் நீங்கள் தான் என் டைரக்டர் நான் தான் உங்களை பார்க்க வரணும் என்று சொல்லி இருக்கிறார்.

Vijayakanth-Vijay

அப்படி ஆரம்பித்து விஷயத்தை கூற தம்பிக்கு தானே சார் நிச்சயமாக பண்ணலாம் என்று கூறி செந்தூரப்பாண்டியன் படத்திற்கு வாய்ப்பு கொடுத்து விஜயை தூக்கி விட்டவர் விஜயகாந்த்.

இந்நிலையில், விஜயகாந்த் பல ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் இருந்து கஷ்டப்பட்டு வந்துள்ளார். ஆனால், விஜய் நன்றி இல்லாமல் விஜயகாந்த்தை நேரில் கூட சந்தித்து பார்க்க வில்லையாம்.

Vijayakanth-Vijay

இதனிடையே, தேமுக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று காலை உடல் நலக்குறைவால் அவரது 71 வது வயதில் மரணம் அடைந்தார். இந்த செய்தி தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இப்போதாவது விஜய் தன்னை உயர்த்தி பெயர் வாங்கி கொடுத்த விஜயகாந்த்தின் உடலை பார்க்க வருவாரா இறுதி அஞ்சலி செலுத்துவாரா என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 347

    1

    0