லியோ படத்தின் முதல் திரைவிமர்சனம்… பிரபலத்தின் Review இதோ? தேறுமா? தேறாதா?

Author: Shree
27 June 2023, 7:49 pm

தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது.

leo-updatenews360

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. எனவே படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ள ரத்தினகுமார் லியோ படம் குறித்து சுவாரஸ்ய தகவல் ஒன்றை கூறியுள்ளார். ” லியோ படத்தில் விஜய் “அப்பாவி குடும்ப தலைவராகவும், அதிரடி கேங்ஸ்டராகவும்” இரண்டு கேரக்ட்ரில் நடித்துள்ளாராம்.

முதலில் ஏழையாக இருக்கும் விஜய் எதிரிகளால் சீண்டப்பட்டு பின்னர் கேங்ஸ்டராகி சாமானிய மக்களுக்கு நீதி, நியாயம் பேசுவது போல் நல்லவராக நடித்திருக்கலாம் என யூகிக்க முடிகிறது. பிரபலத்தின் இந்த தகவல் முதல் விமர்சனமாகவே பார்க்கப்படுகிறது. இதே போன்ற கான்செப்டில் தமிழ் சினிமாவில் நிறைய படம் வெளிவந்திருக்கிறது. இருந்தாலும் இது லோகேஷ் படம் என்பதால் கொஞ்சம் மசாலா அதிகமாகவே தூவப்பட்டு தூக்கலாக இருக்கும் என நிச்சயம் நம்பலாம்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ